4 பேர் முதல் 5 பேர் வரை குடும்பமா போகணுமா.. அதிக மைலேஜ் தரும் உங்களுக்கான குறைந்த பட்ஜெட் கார்கள் இதோ!

Published : Aug 21, 2024, 08:39 AM ISTUpdated : Aug 21, 2024, 11:20 AM IST

பாதுகாப்பில் சமரசம் செய்ய விரும்பாதவர்களுக்கு, ஏர்பேக்குகளுடன் கூடிய சிறந்த கார்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய், டாடா, மாருதி போன்ற முன்னணி நிறுவனங்களின் சிறந்த மாடல்கள் இதில் அடங்கும்.

PREV
15
4 பேர் முதல் 5 பேர் வரை குடும்பமா போகணுமா.. அதிக மைலேஜ் தரும் உங்களுக்கான குறைந்த பட்ஜெட் கார்கள் இதோ!
Family Cars With Airbags

நீங்கள் 10 லட்சத்திற்கும் குறைவான காரைத் தேடுகிறீர்களானால், ஹூண்டாய் எக்ஸ்டெர் ஒரு நல்ல தேர்வாகும். இது இந்தியாவின் மலிவான எஸ்யூவிகளில் ஒன்றாகும். பாதுகாப்பு விஷயத்தில் இந்த எஸ்யூவி சிறந்தது என்று ஹூண்டாய் கூறுகிறது. இதில் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.12 லட்சம் ஆகும்.

25
Hyundai

பிரபலமான செடான் கார்களில், ஹூண்டாய் ஆராவும் ஒன்று. இந்த காரில் ஹூண்டாய் எக்ஸெட்டர் போன்ற 6 ஏர்பேக்குகளின் பலனும்  கிடைக்கும். குடும்பங்களுக்கு ஏற்ற இந்த காரில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.48 லட்சம் ஆகும்.

35
Maruti Suzuki

மாருதி நிறுவன கார்கள் என்றாலே குறைந்தபட்ச உத்தரவாதம் என்றே கூறலாம். மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் பலேனோ நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது. இது 6 ஏர்பேக்குகளையும் பெற்றுள்ளது. காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 8.43 லட்சம் ஆகும்.

45
TATA Nexon

டாடா நெக்ஸான் பாதுகாப்பு விஷயத்தில் சிறந்த எஸ்யூவியாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் இந்த கார் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 8.15 லட்சம் ஆகும்.

55
KIA Sonet

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக நிச்சயம் இருக்கும் என்றே சொல்லலாம். இந்த எஸ்யூவியின் ஒவ்வொரு வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள் உள்ளன. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் ஆகும்.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories