Tata Nano EV
சில காலமாக, இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ல் இருந்து வரும் டாடா நானோ இவி (Tata Nano EV) பற்றி பல செய்திகள் வெளிவருகின்றன. டாடா நானோ EV எப்போது வெளிவரும் என்பது குறித்து காண்போம். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, டாடா தனது நானோ காரை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியது.
Tata Motors
ஆனால் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், நிறுவனம் டாடா நானோவை மின்சார வாகன அவதாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பல நவீன அம்சங்களைக் காணலாம். மைலேஜ் பொறுத்தவரை, இந்த காரில் 200 முதல் 400 கிலோமீட்டர் வரை வரலாம் என்று வாகனத்துறையை சேர்ந்தவர்களால் கூறப்படுகிறது.
Tata Nano Electric Car
அதே நேரத்தில் சக்திவாய்ந்த மோட்டார் காரணமாக, இந்த மின்சார நான்கு சக்கர வாகனம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் உள்ளது. அதிவேகத்தில் இயங்கக் கூடியதாக இருக்கும். அதன் சிறப்பம்சங்கள் குறித்து இன்னும் அதிக அப்டேட்கள் வெளிவரவில்லை. ஆனால் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்ட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற பல வசதிகளும் இதில் காணப்படும்.
Tata Nano EV Price
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வரும் டாடா நானோ இவி (EV) ஆனது பட்ஜெட் பிரிவு மின்சார நான்கு சக்கர வாகனமாக இருக்கும், இது மினி எலக்ட்ரிக் கார் போன்ற அளவில் இருக்கும். ஆனால் இதில் பல புதிய மற்றும் நவீன அம்சங்களை நாம் பார்க்கலாம். விலையைப் பற்றி பார்க்கும் போது, இதன் விலை ₹ 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?