மைலேஜ் வாரி வழங்கும்.. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் பட்ஜெட் பைக்குகள்.. முழு லிஸ்ட்

Published : Feb 05, 2026, 12:05 PM IST

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், தினசரி பயணத்திற்கு குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளை தேர்வு செய்வது அவசியமாகியுள்ளது. ரூ.70,000 பட்ஜெட்டில் கிடைக்கும் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
இந்திய மக்கள் வாங்கும் பட்ஜெட் மைலேஜ் பைக்குகள்

இந்தியாவில் தினசரி அலுவலகம், கல்லூரி, வேலைக்கு செல்வோர் அதிகம் விரும்புவது குறைந்த விலை + அதிக மைலேஜ் தரும் பைக்குகள்தான். பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், ரூ.70,000க்குள் கிடைக்கும் மைலேஜ் பைக்குகள் நடுத்தர மக்களுக்கு பெரிய நிம்மதியைத் தருகின்றன. இவை பராமரிப்பு செலவு குறைவு, ஓட்ட எளிது, நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்றவை. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பிரபலமாக உள்ள 5 மைலேஜ் பைக்குகளை பார்ப்போம்.

26
ஹீரோ எச்எப் டீலக்ஸ்

ஹீரோ எச்எப் டீலக்ஸ் என்பது பல ஆண்டுகளாக நம்பிக்கையை பெற்ற கம்யூட்டர் பைக். இதன் விலை சுமார் ரூ.66,000 முதல் ரூ.69,000 வரை உள்ளது. 100cc எஞ்சின் கொண்ட இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 70–75 கிமீ வரை மைலேஜ் தரும். எளிய வடிவமைப்பு, குறைந்த பராமரிப்பு செலவு, நகர பயணத்திற்கு ஏற்ற சஸ்பென்ஷன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

36
பஜாஜ் பிளாட்டினா 100

பஜாஜ் பிளாட்டினா 100 அதிக மைலேஜ் பைக்குகளின் பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்கும். இதன் விலை ரூ.60,000க்கு அருகில் இருக்கும். நீண்ட சீட், மென்மையான ரைடு மற்றும் சிறந்த சமநிலை காரணமாக தினசரி நீண்ட தூர பயணிகளுக்கு இது ஏற்ற தேர்வாக உள்ளது. மைலேஜ் சுமார் 70–75 கிமீ வரை கிடைக்கும் என்பதும் முக்கிய காரணம்.

46
டிவிஎஸ் ஸ்போர்ட்

டிவிஎஸ் ஸ்போர்ட் என்பது நம்பகமான எஞ்சின் மற்றும் நல்ல பில்ட் குவாலிட்டியுடன் வரும் பைக். இதன் விலை ரூ.65,000 முதல் ரூ.68,000 வரை இருக்கும். நகரம் மற்றும் கிராமம் இரண்டிலும் சீரான ஓட்ட அனுபவத்தை தரும் இந்த பைக், 65-70 கிமீ வரை மைலேஜ் வழங்கும். டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் இருப்பது கூடுதல் பலன் ஆகும்.

56
ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட்

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் என்பது ஸ்ப்ளெண்டர் வரிசையில் வரும் ஒரு மேம்படுத்தப்பட்ட மாடல். இதன் விலை சுமார் ரூ.67,000 முதல் ரூ.69,000 வரை இருக்கும். இதில் உள்ள ஸ்மார்ட் இக்னிஷன் தொழில்நுட்பம் எரிபொருள் சேமிப்புக்கு உதவுகிறது. 65–70 கிமீ மைலேஜ், நம்பகத்தன்மை மற்றும் மறுவிற்பனை மதிப்பு ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.

66
டிவிஎஸ் எக்ஸ்எல் 100

டிவிஎஸ் எக்ஸ்எல் 100, ஒரு பாரம்பரிய கியர்லெஸ் மொபெட் ஆகும். இதன் விலை ரூ.55,000க்கு அருகில் உள்ளது. அதிக சுமை எடுத்துச் செல்லும் திறன், 75-80 கிமீ வரை மைலேஜ், மிகக் குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய காரணங்களால் இது டெலிவரி வேலைகள் மற்றும் தினசரி உபயோகத்திற்கு மிகவும் பிரபலமாக உள்ளது. ரூ.70,000க்குள் அதிக மைலேஜ் தேடுபவர்களுக்கு இந்த 5 பைக்குகளும் சிறந்த தேர்வாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories