இந்தியர்கள் வாங்கி குவிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவா.! ஹிட் அடித்த நிறுவனம் எது.?

Published : Sep 05, 2025, 10:40 AM IST

ஆகஸ்ட் 2025ல் ஓலா எலக்ட்ரிக், பஜாஜ் ஆட்டோவை முந்தி இரண்டாவது பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக உயர்ந்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, பஜாஜ் 5ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

PREV
15
அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 2025 இல் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை இரண்டாவது இடத்தில் இருந்த பஜாஜ் ஆட்டோவை முந்தி, ஓலா எலக்ட்ரிக் இரண்டாவது பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் ஆனது. முதலிடத்தில் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் iQube தான் உள்ளது. இதேசமயம், பஜாஜ் ஆகஸ்டில் ஏதர் எனர்ஜி மற்றும் ஹீரோ விடா நிறுவனங்களுக்கும் பின்னால் போய் 5ஆம் இடத்தில் தள்ளப்பட்டது.

25
ஆகஸ்ட் மாத விற்பனை

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 24,087 iQube யூனிட்ஸ் விற்று 23% மார்க்கெட் ஷேர் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக் 18,972 யூனிட்ஸ் விற்று 18% மார்க்கெட் ஷேருடன் 2வது இடம் பிடித்தது. ஜூலை 17,852 யூனிட்ஸ் மட்டுமே விற்ற ஓலா, ஆகஸ்டில் சிறந்த முன்னேற்றம் கண்டது.

35
ஏதர் மற்றும் ஹீரோ விடா

பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் ஆகஸ்டில் 11,730 யூனிட்ஸ் மட்டுமே விற்று 11% மார்க்கெட் ஷேர் பெற்றது. ஜூலை 19,683 யூனிட்ஸ் விற்று 2வது இடத்தில் இருந்த பஜாஜ், ஆகஸ்டில் 5ஆம் இடத்துக்கு சரிந்தது. அதேசமயம், ஏதர் எனர்ஜி 17,856 யூனிட்ஸ் விற்று 17% மார்க்கெட் ஷேருடன் 3வது இடம், ஹீரோ விடா 13,313 யூனிட்ஸ் விற்று 13% மார்க்கெட் ஷேருடன் 4வது இடம் பிடித்தது.

45
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா S1 Z மாடல் விலை ரூ.59,999 – 64,999 வரை, S1 Air ரூ.89,999, S1 X மாடல்கள் ரூ.99,999 – 1.30 லட்சம் வரை விற்கப்படுகின்றன. S1 Pro மாடல்கள் ரூ.1.40 – 1.65 லட்சம், S1 X Plus ரூ.1.35 லட்சம், S1 Pro Sport ரூ.1.50 – 1.65 லட்சம், S1 Pro Plus ரூ.1.60 – 1.70 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

55
பஜாஜ் சேடக் ஸ்கூட்டர்

பஜாஜ் எலக்ட்ரிக் சேடக் 3001 மாடல் ரூ.1,07,400, 3503 மாடல் ரூ.1,14,500, 3502 மாடல் ரூ.1,27,500 மற்றும் 3501 மாடல் ரூ.1,39,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால், விற்பனை போட்டியில் ஓலா எலக்ட்ரிக் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories