எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
AMO Electric Bike Inspirer EV பைக் சுமார் 68,000 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், இந்த அமேசான் சேலில் சுமார் 26 சதவிகிதம் விலை குறைக்கப்பட்டு வெறும் 49,890 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. EMI (மாதம் 2500 ரூபாய்) மற்றும் பிற அடிப்படை சலுகைகளும் இதில் உள்ளது.
OLA S1 Pro Electric Scooter, இப்பொது சந்தையில் அதிக அளவில் வரவேற்பை பெரும் எலக்ட்ரிக் வண்டிகளில் ஓலாவிற்கு நல்ல மவுசு இருந்து வருகின்றது. அவ்வப்போது ஓலா குறித்த சில சர்ச்சைகள் "வெடித்தாலும்", உண்மையில் இந்த வாகனத்திற்கான வரவேற்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இந்த OLA S1 ப்ரோ இப்பொது 1.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், அமேசானில் சுமார் 1.2 லட்சத்திற்கு விற்பனையாகி வருகின்றது.
Green Invicta Electric Scooter, வாகன சந்தையில் மெல்ல மெல்ல முன்னேறி வரும் க்ரீன் இன்விக்டா நிறுவனம் தனது வண்டிகளை அதிரடி விலை குறைப்பில் அமேசான் மூலம் விற்பனை செய்கிறது. அந்த வகையில் 60 கிலோமீட்டர் ரேஞ்சு கொண்ட, 95,000 ரூபாய் விலை உள்ள Green Invicta Electric Scooter இப்பொது 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.