இந்திய சந்தைக்கான தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான 'ஹோண்டா ஆல்ஃபா' (Honda Alpha) மாடலை டிசம்பர் 2, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. 500 கி.மீ ரேஞ்ச், பேட்டரி திறன் மற்றும் முழு சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ஹோண்டா ஆல்ஃபா
இந்திய மின்சார வாகன (EV) சந்தையில் தடம் பதிக்கும் விதமாக, ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக களமிறக்கத் தயாராகிவிட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட '0 ஆல்ஃபா' (0 Alpha) கான்செப்ட் மாடலின் தயாரிப்பு வடிவமான (Production-ready version) இந்த எஸ்யூவி, வரும் டிசம்பர் 2, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சந்தைக்கு வரும்போது அதன் பெயரில் உள்ள 0 நீக்கப்பட்டு, ஹோண்டா ஆல்ஃபா (Honda Alpha) என்ற பெயரிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியச் சாலைகளில் தீவிர சோதனை ஓட்டங்களை மேற்கொண்டு வந்த ஹோண்டா, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
24
இந்தியாவே உலகளாவிய உற்பத்தி தளம்
இதுதொடர்பாக ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தோஷியுகி யானகிசாவா (Toshiyuki Yanagisawa) கூறுகையில், ஹோண்டா ஆல்ஃபா என்பது இந்திய வாடிக்கையாளர்களுக்கு நவீன எலக்ட்ரிக் மொபிலிட்டியை வழங்குவதுடன், ஹோண்டாவுக்கு உரித்தான தரம், நம்பகத்தன்மை மற்றும் ஓட்டுநர் மகிழ்ச்சியைத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த மாடலுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா செயல்படவுள்ளது. இது ஹோண்டாவின் மின்மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இந்திய சந்தை மீதான எங்கள் வலுவான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
34
வடிவமைப்பு எப்படி இருக்கும்?
இந்தியச் சாலைகளில் சோதனை செய்யப்பட்ட மாதிரி வாகனங்களின் புகைப்படங்களின்படி, இந்த உற்பத்தி மாடல் '0 ஆல்ஃபா' கான்செப்ட் வடிவமைப்பிற்கு மிக நெருக்கமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. கான்செப்ட் மாடலில் இடம்பெற்ற அதே தனித்துவமான நிமிர்ந்த முகப்புத் தோற்றம் மற்றும் பின்பகுதி வடிவமைப்பு, பின்புற கண்ணாடியை ஒட்டியபடி அமைந்துள்ள டெயில் லேம்ப்கள் மற்றும் தடிமனான சி-பில்லர் (C-pillar) போன்ற அம்சங்கள் இதிலும் தக்கவைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் பம்பர் அமைப்பும் கான்செப்ட் மாடலின் வடிவமைப்பை ஒத்தே காட்சியளிக்கிறது.
ஹோண்டா ஆல்ஃபா எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் மாருதி சுஸுகி இ-விடாரா (Maruti Suzuki e-Vitara) போன்ற மாடல்களை விட அளவில் பெரியதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதில் 50 முதல் 70 kWh வரையிலான பேட்டரி தேர்வுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒரே முழு சார்ஜில் நிஜ உலக பயன்பாட்டில் (Real-world range) 400 முதல் 500 கி.மீ வரை பயணிக்கும் அளவிலான ரேஞ்சை இந்த எஸ்யூவியில் வழங்க ஹோண்டா இலக்கு நிர்ணயித்துள்ளது.