இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால், அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தினசரி பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்ற சிறந்த ஸ்கூட்டர்களின் அம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி பயணம் செய்யும் பெண்களுக்கு எளிதாக ஓட்டக்கூடிய, எடை குறைந்த மற்றும் நல்ல மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் முக்கியமானதாக உள்ளன. அந்த வகையில், பெண்கள் பயன்படுத்த ஏற்ற 3 ஸ்கூட்டர்கள் குறித்து பார்க்கலாம்.
24
பெண்கள் ஓட்ட எளிதான ஸ்கூட்டர்கள்
சுசுகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக பலராலும் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.78,184 ஆகும். இந்த ஸ்கூட்டர் சுமார் 50 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதன் எஞ்சின் மென்மையாக செயல்படுவதால் நகரப் பயணத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
34
குறைந்த விலையில் பெண்கள் ஸ்கூட்டர்கள்
டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டர் சுமார் ரூ.77,000 முதல் தொடங்கும் விலையில் கிடைக்கிறது. இதுவும் சுமார் 50 கி.மீ வரை மைலேஜ் வழங்கும். இதன் முக்கிய அம்சங்களில் பெரிய அளவிலான அண்டர்-சீட் ஸ்டோரேஜ் மற்றும் வசதியான இருக்கை குறிப்பிடத்தக்கது. அலுவலகப் பொருட்கள், பைகள் அல்லது தினசரி தேவைகள் எடுத்துச் செல்லும் பெண்களுக்கு இந்த ஸ்கூட்டர் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு பிரபலமான மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகும். இந்தியாவில் மிகவும் நம்பகமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.89,652 ஆகும். சுமார் 60 கி.மீ வரை மைலேஜ் தரும் இந்த ஸ்கூட்டர், பராமரிப்பு செலவு குறைவாகவும், மறுவிற்பனை மதிப்பு அதிகமாகவும் இருப்பதால் நகரங்களில் பயணிக்கும் பலராலும் விரும்பப்படுகிறது.