ரூ.2.5 லட்சம் பைக் இப்போ ரூ.1.49 லட்சம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க சரியான சான்ஸ்

Published : Mar 06, 2026, 11:03 AM IST

அல்ட்ராவைலட் நிறுவனம் தனது X-47 கிராஸ்ஓவர் மின்சார பைக்கிற்காக 'பேட்டரி ஃப்ளெக்ஸ்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், உயர்தர மின்சார பைக்குகளை வாங்குவதை எளிதாக்குகிறது.

PREV
15
அல்ட்ராவயலெட் X-47 எலக்ட்ரிக் பைக்

மின்சார இருசக்கர வாகனங்களை அதிகமான மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் Ultraviolette நிறுவனம் புதிய Battery Flex திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் Ultraviolette X-47 Crossover மின்சார பைக்கை குறைந்த ஆரம்ப முதலீட்டில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதுவரை சுமார் ரூ.2.50 லட்சம் விலையில் இருந்த இந்த பைக், புதிய திட்டத்தின் கீழ் ரூ.1.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

25
பேட்டரி ஃப்ளெக்ஸ் திட்டம்

இந்த திட்டம் Battery-as-a-Service (BaaS) முறைப்படி செயல்படும். அதாவது, பைக்கின் சேசிஸ் (சேஸிஸ்) விலையை மட்டும் முதலில் செலுத்தி வாகனத்தை வாங்கலாம். பேட்டரிக்கான கட்டணத்தை மாதாந்திர சந்தா முறையில் செலுத்தலாம். பேட்டரி சந்தா திட்டம் ரூ.2,499 முதல் தொடங்குகிறது. இது சாதாரணமாக பெட்ரோலுக்காக மாதந்தோறும் செலவாகும் தொகையைவிட குறைவாக இருக்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது.

35
உயர்தர மின்சார பைக்

இந்த Battery Flex திட்டம் Ecofy என்ற இந்தியாவின் பசுமை நிதி சேவை வழங்கும் NBFC நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், வாடிக்கையாளர்கள் அதிக முதலீடு செய்யாமல் ஒரு உயர்தர மின்சார பைக்கை பயன்படுத்தும் வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் பேட்டரி பராமரிப்பு அல்லது மாற்றம் பற்றிய கவலைகள் இல்லாமல் வாகனத்தை பயன்படுத்த முடியாது.

45
பேட்டரி வாரண்டி

பேட்டரி சந்தா திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர் சந்தா காலத்தை முடித்த பிறகு, அந்த பேட்டரியின் உரிமை கூடுதல் கட்டணம் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளருக்கு மாற்றப்படும். இதனால் நீண்ட காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.

55
முன்பதிவு தொடக்கம்

பேட்டரி ஃப்ளெக்ஸ் திட்டத்திற்கு பதிவு 2026 மார்ச் 5 முதல் தொடங்கும். இந்த திட்டத்தின் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக திறன் கொண்ட மின்சார பைக்கை வாங்கும் வாய்ப்பு இந்திய முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மின்சார வாகனங்களை பொதுமக்களுக்கு இன்னும் அணுகக்கூடியதாக மாற்றும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories