மஹிந்திரா XUV 3XO CNG காரின் 24.70 கிமீ மைலேஜ், டர்போ இன்ஜின் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் அம்சங்களுடன் வெளிவந்த புதிய காரின் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி காரான 'எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ' (Mahindra XUV 3XO CNG) காரின் புதிய சிஎன்ஜி மாடல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் என நிர்ணயிக்கபட்டு உள்ளது.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி (Tata Nexon CNG) மற்றும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) ஆகிய கார்களுக்கு நேரடிப் போட்டியாகக் களம் இறக்கப்பட்டுள்ள இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சமாக இதன் மைலேஜ் மற்றும் பவர்ஃபுல்லான டர்போ இன்ஜின் விளங்குகின்றன. இந்தியாவில் பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் மற்றும் தற்பொழுது சிஎன்ஜி என மொத்தம் 4 விதமான பவர்ட்ரெயின் (Powertrains) ஆப்ஷன்களுடன் கிடைக்கக்கூடிய 2-வது கார் என்ற பெருமையை இந்த எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ பெற்றுள்ளது.
24
வேரியண்ட்கள் & விலை விபரங்கள்
வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப இந்த புதிய சிஎன்ஜி கார் மொத்தம் 4 முக்கிய வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
XUV 3XO CNG MX Edge (ஆரம்ப மாடல்) - ரூ. 9,99,000.
XUV 3XO CNG RevX Edge (O) - ரூ. 10,79,000.
XUV 3XO CNG AX5 - ரூ. 11,19,000.
XUV 3XO CNG RevX A (டாப்-எண்ட் மாடல்) - ரூ. 12,27,000.
34
24.70 கி.மீ அசாத்திய மைலேஜ் & டர்போ இன்ஜின்
சந்தையில் இருக்கும் மற்ற சிஎன்ஜி கார்கள் அனைத்தும் சாதாரண இன்ஜின்களுடன் (Naturally Aspirated) வரும் வேளையில், இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் பவர்ஃபுல்லான 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் சிஎன்ஜி இன்ஜின் (1.2-liter turbo-petrol CNG engine) பொருத்தப்பட்டுள்ளது இதன் மிகப்பெரிய பலமாகும். இந்த இன்ஜின் சிஎன்ஜி மோடிலும் அதிகபட்சமாகச் சுமார் 110 bhp பவரையும் மற்றும் 200 Nm டாப் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
டர்போ இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த கார் வெறும் 11.8 விநாடிகளிலேயே 0-விலிருந்து 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடித்துவிடும். பவர் அதிகமாக இருந்த போதிலும், இது ஒரு கிலோ சிஎன்ஜிக்குச் சுமார் 24.70 கி.மீ வரை அசாத்திய மைலேஜ் (24.70 km/kg Fuel Efficiency) வழங்கும். எனவே, உச்சக்கட்ட பெட்ரோல் விலைக்குப் பயந்து தினசரி அலுவலகப் பயணம் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்குப் பாதுகாப்பான மைலேஜ் கார் தேடுபவர்களுக்கு இது மிகவும் லாபகரமான மாடலாகும். மேலும், டிரைவரின் சௌகரியத்திற்கு ஏற்ப இதில் நார்மல், கம்பர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் (Normal, Comfort, Sports) என 3 விதமான ஸ்டீயரிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத் தோற்றத்தைப் பொறுத்தவரை இது வழக்கமான பெட்ரோல் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரைப் போலவே கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. காரின் உட்புறம் (Interior) பிரீமியம் லெதரெட் சீட்கள் மற்றும் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் வசதிகளுடன் மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் முன்பக்க சீட் பெல்ட்டுகள், ரியர் வைப்பர், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆடியோ சிஸ்டம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பட்ஜெட்டிலேயே வானத்தைப் பார்த்து ரசிக்கும் படியான பிரமாண்டமான பனோரமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வசதியும் இதில் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.