Astrology: 40 வயதிற்கு பின் கோடீஸ்வர யோகம்! சனி - குரு அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசிகள்!

Published : Sep 07, 2026, 09:00 AM IST

Astrology: 40 வயதிற்கு பின் சனி மற்றும் குருவின் அருளால் 4 ராசியினருக்குத் தடைகள் விலகி, தொழில் வளர்ச்சி மற்றும் அபரிமிதமான கோடீஸ்வர தன யோகம் கூடிவரும். அவை என்னென்ன ராசிகள்? என பார்ப்போம்.

PREV
15
40 வயதிற்கு பின் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்

வாழ்க்கை பயணம் அனைவருக்கும் ஒரே சீராக அமைவதில்லை. சிலருக்கு ஆரம்ப கட்டம் எளிதாகவும், சிலருக்குத் தொடர் போராட்டங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். எவ்வளவுதான் அயர்வாது உழைத்தாலும் அதற்குரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்காமல் தவிப்பார்கள். ஆனால், ஜோதிடக் கணிப்புகளின்படி, குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சில ராசியினருக்கு வாழ்க்கைத் தராசு பாசிட்டிவ் திசையில் மாறத் தொடங்கும்.

குறிப்பாக, 40 வயதைக் கடக்கும் போது பலருக்குத் தடைகள் விலகி, பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய வளர்ச்சி சாத்தியமாகிறது. இளமைக்கால அனுபவங்கள், பெற்ற முதிர்ச்சி மற்றும் கிரகங்களின் சாதகமான நகர்வுகள் ஆகியவை இவர்களைச் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஜோதிட அமைப்பில், 40 வயதுக்குப் பிறகே சனி மற்றும் குரு ஆகிய பிரதான கிரகங்களின் தாக்கம் வலுவடைகிறது. நற்கர்மங்களின் பலன்கள் கிடைக்கத் தொடங்கும் இந்த காலகட்டத்தில், 40 வயதுக்குப் பின் அதிர்ஷ்டமும் செல்வமும் தேடி வரப் போகும் 3 ராசிகள் பற்றி கீழே காண்போம்:

25
ரிஷபம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட ரிஷப ராசியினர், ஆரம்ப காலத்தில் கடும் உழைப்பைச் சிந்தினாலும் அதற்கேற்ற முன்னேற்றத்தைக் காண்பது அரிது. இதனால் பலமுறை மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.

ஆனால், 40 வயதைத் தாண்டியதும் சுக்கிரனின் அருளோடு குருவின் பார்வையும் இணையும் போது தன யோகம் கூடிவரும். இதுவரை தாமதமான பலன்கள் அனைத்தும் மிகக் குறைந்த முயற்சியிலேயே இவர்களை வந்தடையும். சமுதாயத்தில் தனக்கென ஒரு கௌரவமான இடத்தையும், நிலையான செல்வத்தையும் இவர்கள் அடைவார்கள்.

35
கன்னி

புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியினர், வாழ்வின் முற்பகுதியில் மற்றவர்களைச் சார்ந்து நிற்பதாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் பல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

ஆனால், 40 வயதுக்குப் பிறகு இவர்களிடம் உள்ள சுய திறமைகளும் தனித்துவமான புத்தி கூர்மையும் முழுமையாக வெளிப்படும். தனது சொந்த பலத்தைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவர். இதன் விளைவாக, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உயரங்களைத் தொட்டு, எதிர்பாராத நிதி வளர்ச்சியைப் பெறுவார்கள்.

45
மகரம்

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியினர் இயல்பிலேயே கடும் உழைப்பாளிகள் மற்றும் கடமை தவறாதவர்கள். இளமைக் காலத்தில் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடைகளும் தோல்விகளுமே மிஞ்சும். இருப்பினும், இவர்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடுவார்கள்.

40 வயதிற்குப் பின், இவர்களின் பொறுமைக்கும் உழைப்பிற்கும் சனி பகவான் முழுமையான நற்பலன்களை வழங்கத் தொடங்குவார். தொழில் விருத்தி, அசையாச் சொத்துக்கள் சேர்க்கை, அரசாங்க ரீதியிலான நன்மைகள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து என அனைத்து செல்வங்களையும் இவர்கள் அடைவார்கள்.

55
விருச்சிகம்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினர், வாழ்க்கையின் முதல் பாதியில் பலவிதமான பின்னடைவுகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். எதிலும் தீவிரமாக உழைத்தாலும், உரிய பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

ஆனால், 40 வயதைக் கடந்ததும் இவர்களின் உள்ளுணர்வும், சூழ்நிலையைக் கையாளும் நிதானமும் அபாரமாக அதிகரிக்கும். கிரகங்களின் சாதகமான பார்வையால், இழந்த செல்வத்தையும் மரியாதையையும் வட்டி முதலுமாக மீட்டெடுப்பார்கள். சொந்த தொழில் மற்றும் முதலீடுகள் மூலம் அபரிமிதமான லாபத்தைக் குவிப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories