Birth Date: இந்த தேதில பிறந்த பெண்கள் அதிபுத்திசாலி!! குடும்பத்தை சூப்பரா நடத்துவாங்க

Published : Aug 08, 2025, 05:59 PM IST

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே புத்திசாலிகள். ஆனால் அதுதான் அவர்களுக்கு பிரச்சனை.

PREV
14
Birth Dates That Often Indicate Deep Overthinking in Women

எண் கணிதத்தின் படி ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை எதிர்காலத்தை கணிக்க முடியும். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே புத்திசாலியாக இருப்பார்கள். ஆனால் அந்த புத்திசாலித்தனத்தின் காரணமாக அவர்கள் அதிகமாக சிந்திப்பதால் சிறிய பிரச்சனையை கூட பெரியதாக்கிவிடுவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் காணலாம்.

24
எண் 3

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3 இன் கீழ் வருவார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ரொம்பவே புத்திசாலிகள். அவர்கள் அதிகமாக சிந்திப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் எல்லாவற்றிலும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அதற்காக வாக்குவாதம் கூட செய்ய தயங்க மாட்டார்கள். அவர்கள் ரொம்பவே பிடிவாதக்காரர்களும் கூட. இவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை மட்டுமே செய்ய விரும்புவார்கள்.

34
எண் 5

எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5இன் கீழ் வருவார்கள். இவர்கள் ரொம்பவே புத்திசாலிகள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்கும் வரை ஓயமாட்டார்கள். நீண்ட நேரம் யோசித்து கூட தீர்வை கண்டுபிடிப்பார்கள். யாராவது ஏதேனும் சொன்னால் இவர்கள் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு காயம் அடைந்து விடுவார்கள். மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வரை ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது பிறருக்கு எரிச்சலூட்டும்.

44
எண் 7

எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7இன் வருவார்கள். இவர்கள் அதிபுத்திசாலிகள். மேலும் சிந்தனையாளர்களும் கூட. இவர்கள் வெளியில் பார்க்க அமைதியாக தெரியலாம். ஆனால் உள்ளே அவர்கள் பல விஷயங்களை யோசித்து கொண்டு இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் நீண்ட நேரம் இல்லாவிட்டாலும் யோசித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் பல பிரச்சனைகள் எதிர்கொள்வார்கள். மேலும் இவர்கள் எல்லாவற்றையும் மிக விரைவாக தவறாக புரிந்து கொள்வார்கள். ஒரு சிறிய சந்தேகம் வந்தால் கூட அதற்கு தீர்வு கிடைக்கும் வரை அதை விட மாட்டார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories