Vinayagar Arupadai Veedu in Tamil : விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அந்த 6 கோயில்களின் பெயர்கள், சிறப்புகள் மற்றும் அவற்றின் புராண பின்னணி குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம். Part 1 - 2 Temples
அறுபடைவீடு என்றால் முதலில் ஞாபகம் வருவது முருகப்பெருமான் ஆனால் இந்த தொகுப்பில் அறுபடைவீடு முருகனின் அண்ணன் விநாயகர் பெருமான். இவருக்கு அறுபடை வீடுகள் தமிழ்நாட்டில் உள்ளது அதனை ஒவ்வொன்றாக எந்த ஊர் எங்கு அவர் அருள் தருகிறார் கோயிலுக்கு அறுபடை கோவில்களுக்கு சென்றால்க எல்லாம் என் நமது பிரச்சனைகள் எவ்வகையில் தீரும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
23
1. முதல் படை வீடு: திருவண்ணாமலை:
விநாயகர் என்றால் மதுரையில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகரை முதலில் ஞாபகம் வருவார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் மிக சிறப்பாக இருக்கும் தமிழ் வருட பிறப்பிற்கும் மிகச் சிறப்பாக இருக்கும் பிள்ளையார்பட்டி விநாயகர் பெருமான். விநாயகர் மிகப்பெரிய அளவில் அமர்ந்திருப்பார். ஆனால் இந்த தொகுப்பில் அறுபடை விநாயகரை பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்குத் திசையை நோக்கி ராஜ கோபுரத்திற் குள்ளையே முதல் படை விநாயகர் ஆன அல்லல்போம் விநாயகர் அருள் பாலிக்கிறார். முதல் படை விநாயகர் பெயர் அல்லல் போல் விநாயகர்.இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது.நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். இதுவே இவரது சிறப்பு என்று கூறப்படுகிறது.
33
2. இரண்டாம் படை வீடு: விருதாச்சலம்:
இரண்டாம் படை வீடு விநாயகர் பெயர் ஆழத்து விநாயகர். விருதாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மாறியது. இவரை காண்பதற்காக 16 படிகள் இறங்கிய இவரை காண வேண்டும். இதில் என்ன சிறப்பு என்றால் இவருக்கென்று தனி கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கும்.இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல் கல்வியறிவும் செல்வமும் தந்து நம் வாழ்வினை வெற்றி அடையச் செய்வார்.