Venus Transit in Taurus Warning Zodiac Signs : ரிஷப ராசியில் சுக்கிரன் நுழைவதால் மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், அதிலிருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சுக்கிரன் தனது சொந்த வீடான ரிஷப ராசிக்கு (ஏப்ரல் 19) பிரவேசித்த நிலையில் சில ராசிகளுக்கு யோகத்தை தந்தாலும், கிரக நிலைகளின் அடிப்படையில் சில ராசிகளுக்கு இது சோதனையான காலமாகவும் அமையக்கூடும். சுக்கிரன் ஒரு ராசிக்கு 6, 8, அல்லது 12 ஆகிய இடங்களில் மறையும்போது அல்லது பகை கிரகங்களுடன் இணையும்போது எதிர்மறையான பலன்களை வழங்குகிறார். மே 14 வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சியில் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
25
துலாம்
துலாம் ராசிக்கு ராசி அதிபதியான சுக்கிரன், இப்போது எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசி அதிபதியே எட்டில் மறைவது சற்று பலவீனமான நிலையாகும். இதனால் தேவையற்ற மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து போகலாம் என்பதால், பேச்சில் நிதானம் அவசியம்.
35
தனுசு
தனுசு ராசிக்கு சுக்கிரன் ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு வருகிறார். ஆறாம் இடத்தில் சுக்கிரன் அமர்வது வீண் கடன் தொல்லைகளை உருவாக்கக்கூடும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்காக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. தேவையற்ற வம்புத் தும்புகளில் தலையிடாமல் இருப்பது உங்கள் நிம்மதியைக் காக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம், இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.
45
மிதுனம்
மிதுனம் ராசிக்கு சுக்கிரன் 12ஆம் இடமான விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். சுக்கிரன் 12-ல் இருப்பது சில நன்மைகளைத் தந்தாலும், சுப விரயங்களைத் தாண்டி தேவையற்ற வீண் செலவுகளையும் ஏற்படுத்தும். சேமிப்புகள் குறையக்கூடும். வெளியூர் பயணங்களின் போது உடைமைகளில் கவனம் தேவை. சட்ட சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வது மன அமைதியைத் தரும்.
55
மேஷம்
மேஷம் ராசிக்கு இரண்டாம் இடத்திற்குச் சுக்கிரன் வந்தாலும், அங்கு அவர் ராகு அல்லது கேதுவின் பார்வையால் பாதிக்கப்பட்டால், குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படலாம். இந்த ராசிகள் மே 14 வரை வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது பாதிப்புகளைக் குறைக்க உதவும்.