Diwali Raja Yoga: 71 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியில் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Published : Nov 08, 2026, 06:36 AM IST

Diwali Raja Yoga: தீபாவளி நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி உள்ளது. புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் மற்றும் சூரியன், புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய யோகம் ஆகியவை சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும்.

PREV
16
தீபாவளியில் உருவாகும் இரண்டு ராஜயோகங்கள்

தீபாவளி பண்டிகை என்றாலே விளக்குகள், மகாலட்சுமி வழிபாடு, செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை நினைவுக்கு வரும். இந்த ஆண்டு தீபாவளி ஜோதிட ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் என இரண்டு சுப யோகங்கள் உருவாக உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு யோகங்களும் சுமார் 71 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் இணைந்து உருவாகின்றன என்று ஜோதிட வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

26
லட்சுமி நாராயண ராஜயோகம் என்றால் என்ன?

ஜோதிடத்தின்படி புதன் மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் இணைந்திருக்கும்போது லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. புதன் அறிவாற்றல், பேச்சுத்திறன், வணிகம் மற்றும் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது. அதேபோல் சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையின் வசதிகளைக் குறிக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளுக்குச் சாதகமாக இருக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் மற்றும் புதிய முதலீடுகள் குறித்து திட்டமிடுபவர்களுக்கு இந்த யோகம் சாதகமான பலன்களை வழங்கும் என்று ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.

36
புதாதித்ய ராஜயோகத்தின் சிறப்புகள்

சூரியன் மற்றும் புதன் ஒரே ராசியில் இணையும் போது புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் அறிவாற்றல், தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் தொழில் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் சிலருக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு மற்றும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். இந்த இரண்டு ராஜயோகங்களின் அடிப்படையில் மிதுனம், துலாம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

46
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய முயற்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. படைப்பாற்றல் நிறைந்த சிந்தனைகள் மூலம் புதிய திட்டங்களில் முன்னேறலாம். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடுகள் தொடர்பான முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படலாம்.

56
துலாம்

துலாம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரை மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாவதாகக் கூறப்படுகிறது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். பணியாளர்களுக்குப் புதிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கவும், தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

66
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு ராஜயோகங்களும் பொருளாதார ரீதியாகச் சாதகமான பலன்களை வழங்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த பணிகள் நல்ல முடிவுகளைத் தர வாய்ப்புள்ளது. வருமான நிலை படிப்படியாக மேம்படலாம். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கலாம். கடந்த காலத்தில் சந்தித்த பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மெல்ல நிவாரணம் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories