2025ல் குரு பெயர்ச்சி பலன்: பிரச்சனைகளை சந்திக்க ரெடியாக இருக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?

Published : Dec 30, 2024, 10:49 AM IST

Jupiter Transit in 2025 New Year Palan Tamil : 2025ல் நிகழக் கூடிய குரு பெயர்ச்சி ஒரு சில ராசிக்கு சவால் நிறைந்ததாக இருக்க போகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

PREV
17
2025ல் குரு பெயர்ச்சி பலன்: பிரச்சனைகளை சந்திக்க ரெடியாக இருக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?
Jupiter Transit in 2025 New Year Palan Tamil

Jupiter Transit in 2025 New Year Palan Tamil : நாளை மறுநாள் புதன்கிழமையில் 2025 புத்தாண்டு பிறக்கிறது. 2025 புத்தாண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு மற்றும் கேது உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் ஜாதகத்தில் தாச புத்திகளின் படி அவர்வருக்கு பலன்களை கொடுக்க போகிறது. அப்படி நிகழக் கூடிய குரு பெயர்ச்சி காரணமாக சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.

27
Jupiter Transit 2025 Palan Tamil, Jupiter Transit 2025

2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசியினருக்கு நன்மைகளை செய்தாலும் ஒரு சில ராசியினருக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு குரு பகவான் மே 14 ஆம் தேதி ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், அதன் பிறகு அக்டோபர் 18ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி ஆகிறார்.

37
Guru Peyarchi Palan, Guru 2025 Peyarchi Palan

இதைத் தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி கடகத்திலிருந்து குரு வக்கிர பெயர்ச்சியாகிறார். அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 5ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து கடகத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மிதுன ராசிக்கு குரு சஞ்சாரம் மற்றும் கட்க ராசிக்கு குருவின் அதிசார சஞ்சாரம் காரணமாக சில ராசியினர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் முழுவதுமாக நாம் பார்ப்போம்.

47
Guru Peyarchi 2025 Palan Tamil

தனுசு ராசிக்கான 2025 குரு பெயர்ச்சி, அதிசார பெயர்ச்சி பலன்:

தனுசு ராசிக்கு குருவின் அருள் கிடைக்கும். இருந்தாலும் வேலையில் சவால்களை சந்திக்க நேரிடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நன்மை அளிக்கும். பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

57
Astrology, Horoscope, 2025 Guru Peyarchi Palan Pariharam

மிதுன ராசிக்கான 2025 குரு பெயர்ச்சி, அதிசார பெயர்ச்சி பலன்:

இந்த புத்தாண்டில் மிதுன ராசிக்கு குருவின் அருளால் பொருளாதாரம் மற்றும் தொழில் வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். அவசர முடிவை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவின் காரணமாக நீங்கள் தோல்வியை சந்திக்க நேரிடும். காசு, பணத்தையும் இழக்க வாய்ப்புள்ளது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். மெதுவாகவும் சென்று வர வேண்டும்.

67
Top 4 Worst Zodiac Signs Jupiter Transit in 2025

மீனம் ராசி:

மீன ராசிக்கு 2025 குரு பெயர்ச்சி கலவையான பலனை தரும். செலவுகள் அதிகரிக்க கூடும். அலுவலகத்தில் சம்பள உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து சுகம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். மன அழுத்தம் ஏற்படலாம்.

77
Jupiter Transit 2025, Guru Peyarchi Palan, Guru 2025 Peyarchi Palan

மகரம் ராசி:

மகரம் ராசிக்கு குரு பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தவறான பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். வேலை மற்றும் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் கவனம் வேண்டும். வேலை மாற்றத்தை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories