சொகுசு வாழ்க்கை.. அள்ளும் பணம்! ஜாதகப்படி பணக்காரராகப் பிறந்த 4 ராசிகள் நீங்க தான்!

Published : Apr 20, 2026, 07:10 PM IST

Top 4 Richest Zodiac Signs in Astrology Tamil : ஜோதிட ரீதியாக மேஷம், மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்குப் பிறப்பிலேயே பணக்காரராகும் யோகம் உண்டு. அவர்களின் செல்வம், புகழ் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கான ரகசியங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

PREV
14
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். பணியிடத்தில் எவ்வளவு சவால்கள் வந்தாலும், அதைத் தனது கடின உழைப்பால் தகர்த்தெறிவார்கள். மற்றவர்கள் தயங்கும் வேலையைத் துணிச்சலாக ஏற்றுச் செய்து, மிகக் குறுகிய காலத்திலேயே கேரியரில் உச்சத்தைத் தொடுவார்கள். இவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை தூக்கத்தைத் துறந்தாவது உழைப்பார்கள். 

இவர்களின் அகராதியிலேயே 'தோல்வி' என்ற வார்த்தை கிடையாது. மேஷ ராசியினரின் வாழ்க்கையில் 28 வயது முதல் 36 வயது வரையிலான காலகட்டம் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும். இந்த 8 ஆண்டுகளில் இவர்களின் பொருளாதார நிலை பலமடங்கு உயரும். கடின உழைப்பிற்கான பலனாக, இந்த வயதில் புதிய வீடு, சொகுசு கார் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து போன்ற வசதிகள் இவர்களைத் தேடி வரும்.

24
மகரம்

பன்னிரண்டு ராசிகளில் மிகவும் நிதானமான அதேசமயம் உறுதியான ராசி என்றால் அது மகரம் தான். மகர ராசிக்காரர்களுக்கு வேலைதான் தெய்வம். ஒரு காரியத்தை எடுத்தால், அதில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். இவர்களின் கடமை உணர்ச்சியும், ஆர்வமும் சக ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இவர்கள் வெறும் உழைப்பாளிகள் மட்டுமல்ல, மிகச்சிறந்த அறிவாளிகளும் கூட. பணத்தைச் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. 

Mercury Transit: கடனில் இருந்து விடுதலை! புதன் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம்; அள்ள அள்ளக் குறையாத செல்வம் - உங்க ராசி இருக்கா?

சிக்கலான சூழ்நிலைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வித்தை இவர்களுக்குத் தெரியும். மற்றவர்கள் வாழ்க்கையைத் தொடங்க யோசிக்கும் வயதிலேயே, மகர ராசிக்காரர்கள் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துவிடுவார்கள். குறுக்கு வழியில் செல்லாமல், சரியான வாய்ப்புகளைத் துணிச்சலாகப் பயன்படுத்தி, இளம் வயதிலேயே பெரும் சொத்துக்களைச் சேர்த்துவிடுவார்கள். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தங்களுக்குத் தேவையான வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்வார்கள்.

34
விருச்சிகம்

காலபுருஷ தத்துவப்படி எட்டாவது ராசியான விருச்சிகம், செவ்வாயின் ஆதிக்கம் பெற்றது. விருச்சிக ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஆய்வாளர்கள். எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் ஆணிவேர் வரை சென்று ஆராயும் கூர்மையான மதியை உடையவர்கள். இவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், அதை எத்தகைய சவால்கள் வந்தாலும் சாதித்துக் காட்டும் அபார ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் மூலமாகவே வரும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மறைமுகமான ஒரு தெய்வீக சக்தி இவர்களுக்குச் சாதகமாக இருந்து, வெற்றியைத் தேடித்தரும். 

இவர்கள் தோல்வியைக் கண்டு துவளாமல், மீண்டும் எழுந்து வரும் 'பீனிக்ஸ்' பறவை போன்றவர்கள். கூட்டத்தில் ஒருவராக இருக்க இவர்களுக்குப் பிடிக்காது. கலை, அரசியல், தொழில் என எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தனது முத்திரையைப் பதித்து உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவார்கள். விருச்சிக ராசியினர் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். வெளிப்பார்வைக்குக் கண்டிப்பானவர்களாகத் தெரிந்தாலும், பாசம் என்று வந்துவிட்டால் இவர்களைப் போல நேர்மையானவர்கள் எவருமில்லை. துரோகத்தை ஒருபோதும் மன்னிக்காத இவர்கள், விசுவாசத்திற்குப் பெயர் பெற்றவர்கள்.

44
கும்பம்

சனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள், எப்போதும் கூட்டத்தில் தனித்துத் தெரியும் சிந்தனை கொண்டவர்கள். கும்ப ராசியினர் எப்போதுமே குறுக்கு வழியை விரும்பாதவர்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நேர்மையான மற்றும் நீதியான வழியிலேயே முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த 'நேரான வழி' தான் இவர்களுக்கு நீண்ட கால வெற்றியைத் தேடித்தரும். இவர்களது நற்செயல்களே இவர்களுக்குப் பெரும் அதிர்ஷ்டமாகத் திரும்பும். கடின உழைப்பு ஒருபுறம் இருந்தாலும், இக்கட்டான நேரங்களில் இவர்களுக்குக் கிரகங்களின் ஆதரவும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் கை கொடுக்கும். 

மற்றவர்கள் தங்களது பாதையைத் தேடிக் கொண்டிருக்கும் போதே, கும்ப ராசிக்காரர்கள் தங்களுக்குப் பிடித்த துறையில் தடம் பதித்துவிடுவார்கள். திட்டமிட்ட செயல்பாடுகளால் சின்ன வயதிலேயே பெரிய இலக்குகளை எட்டும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் உண்டு.வசதிகள் மற்றும் சொகுசான வாழ்க்கைக்குக் குறைவிருக்காது. கலைநயம் மிக்க வீடு, நவீன ரக வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் என இவர்களது வாழ்க்கை முறை எப்போதும் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஆடம்பரம் நிறைந்ததாக இருக்கும்.

சுக்கிரன் ஆசி கிடைக்கலையா? சிக்கலில் மாட்டப்போகும் 4 ராசிகள்! தப்பிக்க இதோ எளிய வழிகள்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories