வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் சுப மற்றும் அசுப யோகங்கள் மூலம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் கடக ராசியில் குரு, சூரியன், புதன் உள்ளிட்ட 3 முக்கிய கிரகங்களின் சேர்க்கை நிகழ உள்ளது. இதன் காரணமாக திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. ஏற்கனவே கடக ராசியில் குரு பகவானும், புதனும் பயணித்து வரும் நிலையில் வரும் ஜூலை 16ம் தேதி சூரியனும் அதே ராசிக்குள் நுழைகிறார். இந்த யோகத்தால் 12 ராசிகளுமே பலன்களைப் பெற்றாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.