சமையலறை என்பது நம் வீட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான இடம் என்று கூறலாம். ஏனெனில் ஜோதிடம் படி, இவைதான் நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நாம் நம்முடைய வீட்டில் இருக்கும் சமையல் அறையை ஜோதிடம் படி, ஒழுங்காக வைத்தால் வீட்டில் செல்வம் நிலைக்கும், பண வரவு அதிகரிக்கும். அதுபோல் சமையலறையில் இருக்கும் அஞ்சல் பெட்டி செல்வத்தை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? மேலும் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை குறைவில்லாமல் வைத்தால் செல்வம் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும்.