Sun Transit July 2025 in Cancer Palan in Tamil : மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியான சூரியன் 5 ராசிகளின் வாழ்க்கையில் விபரீதமான பலன்களை தரப் போகிறது. அதைப் பார்க்கலாம்.
கடக ராசியில் சூரியன் – 5 ராசிகளுக்கு விபரீதமாகும் வாழ்க்கை: பலன் அண்ட் பரிகாரம்!
Sun Transit July 2025 in Cancer Palan in Tamil : பொதுவாக சூரிய பகவானை கிரகங்களின் ராஜா என்று அழைப்பார்கள். மிதுன ராசியிலிருந்த சூரிய பகவான் கடந்த 16ஆம் தேதி மாலை 5.17 மணிக்கு கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார். வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையில் கடக ராசியில் சூரியன் இருப்பார். அதன் பிறகு கடகத்திலிருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
27
கடக ராசியில் சூரியன் பெயர்ச்சியான நிலையில் என்ன நடக்கும்?
சந்திர கடக ராசியின் அதிபதி. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான உறவு நட்பு அடிப்படையிலானது என்று கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தின்படி சூரியன் அரசு தொடர்பான காரியங்கள், கௌரவம், ஆன்மா, தலைமைப்பண்பு ஆகியவற்றிற்குரிய கிரகம். கடக ராசிக்கு பெயர்ச்சியான சூரியன் இந்த 5 ராசிகளின் வாழ்க்கையில் விளையாட்டு காட்ட போகிறது. அந்த ராசிகள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
37
மேஷ ராசிக்கான சூரியன் பெயர்ச்சி பலன்:
சந்திரனின் வீட்டில் சூரியன் பெயர்ச்சியான நிலையில் மேஷ ராசியில் சூரியன் 4ஆவது வீட்டை பாதிக்கும். இது கணவன் மனைவிக்கிடையில் சலசலப்பை உண்டாகும். உடலநல பாதிப்புகள் ஏற்படலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மன அழுத்தம் உண்டாகக் கூடும்.
பரிகாரம்: மன அழுத்தம் நீங்க தினமும் யோகா, தியானம் செய்யலாம்.
சூரியனின் பாதிப்பு நீங்க, 108 முறை ஓம் சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை நாள்தோறும் சொல்லலாம்.
47
மிதுனம் ராசிக்கான சூரியன் பெயர்ச்சி பலன்:
சூரியனின் சஞ்சாரம் மிதுன ராசியில் 2ஆவது வீட்டை பாதிக்கும். இந்தக் காலகட்டத்தில், நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். கடுமையான வார்த்தைகளால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
பரிகாரம்:
சூரியனின் தீய விளைவுகளைத் தவிர்க்க, தேவைப்படுபவர்களுக்கு கோதுமை அல்லது வெல்லம் தானம் செய்யவும், 'ஓம் துருணி சூர்யாய நமஹ' மந்திரத்தை ஜபிக்கவும்.
57
விருச்சிகம் ராசிக்கான சூரியன் பெயர்ச்சி பலன்:
சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசியில் 9ஆவது இடத்தில் இருக்கிறார். இது விருச்சிக ராசிக்கு கலவையான பலனை கொடுக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, பணியில் பிரச்சனைகள் வரலாம். ஆகஸ்ட் 17 வரை நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: தினமும் சிவலிங்கத்திற்கு பால் அல்லது தண்ணீர் அபிஷேகம் செய்யலாம்.
67
தனுசு ராசிக்கான சூரியன் பெயர்ச்சி பலன்:
தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரம் சாதகமற்ற நிலையில் இருக்கிறது. சூரியனின் இந்த சஞ்சாரம் தனுசு ராசிக்கு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். அதிலேயும், வயிறு மற்றும் முகம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். பணியில் நிதி இழப்பையும், மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடலாம். பயணங்களின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்:
சூரியனின் தீய விளைவுகளைத் தவிர்க்க, தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
77
மகரம் ராசிக்கான சூரியன் பெயர்ச்சி பலன்:
சூரியன் சஞ்சாரம் மகர ராசியின் ஏழாம் வீட்டைப் பாதிக்கும். இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றமும், கூட்டாண்மையில் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மூட்டு அல்லது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்:
சூரியனின் அருளைப் பெற, தினமும் சூரிய யந்திரத்தை வழிபடலாம், ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம் தானம் செய்யலாம்.