
Thai Matha Rasi 2025 Palan Tamil :சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது அது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். அப்படி சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள் தான் மகர சங்கராந்தி பண்டிகை. இந்த நாளில் சூரிய பகவானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவருக்குரிய வழிபாட்டை முறையாக செய்ய சூரிய பகவானின் அருளும் ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம்.
ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இந்த நாளில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும். மேலும் நீராடுதல் மற்றும் தானம் செய்வதன் முக்கியத்துவமும் இந்த நாளில்தான் இருக்கும். இந்த நாளில், மக்கள் சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த பிறகு புனித நதியில் நீராடி, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும், அப்போதுதான் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தங்கள்:
மகர சங்கராந்தியன்று நீராடுதல் மற்றும் தானம் செய்வதற்கான சிறந்த முகூர்த்தம் காலை 9:03 மணி முதல் 10:48 மணி வரை. இது தவிர, பொதுவான சுப முகூர்த்தம் காலை 9:03 மணி முதல் மாலை 5:46 மணி வரை. இந்த சுப முகூர்த்தங்களில் புனித நதியில் நீராடி, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்வதால் பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.
மகர சங்கராந்தியன்று சூரிய பகவான் வழிபாட்டு முறை:
தனுசு ராசியிலிருந்து சூரிய பகவான் மகர ராசிக்குள் ஒரு மாதம் சஞ்சரிக்கும் காலம் தான் தை மாதம். இந்த மாதம் முழுவதும் சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் தை மாதம் முழுவதும் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் ராசி தை மாத பலன்:
மேஷ ராசிக்கு சூரிய பகவான் 10ஆவது இடத்திற்கு எண்ட்ரி கொடுக்கிறார். இது மேஷ ராசிக்கு எல்லா நன்மைகளையும் கொண்டு வந்து தரும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ, செழிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் தை மாத ராசி பலன்:
ரிஷப ராசியினர் பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக இருப்பது அவசியம். வீண் பேச்சு கூடாது. நண்பர்களிடையே சண்டை சச்சரவு வரலாம். சகோதரர், சகோதரிகளின் ஆதரவு கிடைக்காது.
மிதுனம் தை மாத ராசி பலன்:
மிதுன ராசியினருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். வீண் விரையம் உண்டாகும். இந்த மாதம் முழுவதும் உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கடகம் ராசிக்கான தை மாத பலன்:
கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து சென்றால் சண்டை சச்சரவை தவிர்க்கலாம். காதலர்களிடையேயும் வீண் வாக்குவாதம் வரலாம்.
சிம்ம ராசிக்கான தை மாத பலன்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் தொல்லை மறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் ஒருவித அமைதி நிலவும்.
கன்னி ராசிக்கான தை மாத பலன்:
முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குழப்பம் நிலவும். அலுவலகத்தில் பணியில் கவனம் தேவை. எதிலும் பொறுமையாக இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
துலாம் ராசி தை மாத பலன்:
சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்கு 4ஆவது ஸ்தானமான சுக ஸ்தானத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பண விரையம் ஏற்படும்.
விருச்சிகம் ராசிக்கான தை மாத ராசி பலன்:
தைரிய, வீரிய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய் தீரும். எதிரிகள் தொல்லை மறையும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசிக்கான தை மாத பலன்:
இரண்டாம் ஸ்தானமான குடும்ப ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் இருக்கும் நிலையில் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். மூத்தவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்படலாம். பொறுமையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் இழப்பு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
மகரம் ராசிக்கான தை மாத பலன்:
சூரியனின் சஞ்சாரம் மகர ராசியிலேயே இருக்கும் நிலையில் மதிப்பு, மரியாதை குறையும். செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சண்டை, சச்சரவு வரலாம். திருமண வாழ்க்கையில் பாதிப்பு வரலாம்.
கும்பம் ராசிக்கான தை மாத பலன்:
பண விரையம் ஏற்படலாம். சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் வேலை போகும் வாய்ப்பு வரலாம்.
மீனம் ராசி தை மாத பலன்:
மீன ராசிக்கு இந்த தை மாதம் வாழ்க்கைகுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு மாதமாக இருக்கும். வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறலாம். வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வயதில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.