அரசு யோகம் தேடி வரும்! மேஷத்தில் சூரியன் உச்சம்: இந்த 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது!

Published : Apr 09, 2026, 04:12 PM IST

Lucky Zodiac Signs Sun Transit 2026 Predictions : ஏப்ரல் 14 முதல் மே 15 வரை சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறுகிறார். இந்த காலக்கட்டத்தில் அரசு வேலை, பதவி உயர்வு, செல்வச் செழிப்பு கிடைக்கப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
அரசு யோகம் தேடி வரும்! மேஷத்தில் சூரியன் உச்சம்: இந்த 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது!

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் சஞ்சாரம் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் அதிபதியான சூரியன் பகவான் ஏப்ரல் 14 அன்று, மீன ராசியை விட்டு வெளியேறி மேஷ ராசியில் நுழைகிறார். சூரியன் மே 15 வரை இந்த ராசியில் நிலைத்திருக்கும் . அதாவது, ஏப்ரல் 14 முதல் மே 15 வரை சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறுகிறார். இந்த காலக்கட்டத்தில் அரசு வேலை, பதவி உயர்வு மற்றும் செல்வச் செழிப்பு கிடைக்கப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறும் இந்த காலக்கட்டத்தில், குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கான விரிவான பலன்கள் இதோ:

25
விருச்சிகம் - சூரியப் பெயர்ச்சி 2026 பலன்கள்

6-ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது 'சத்ரு ஜெயத்தைக்' கொடுக்கும். அதாவது, மறைமுக எதிர்ப்புகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்பட்டு, புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு தேடி வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் சுமைகள் குறையத் தொடங்கும். உங்கள் தைரியமே உங்கள் வெற்றிக்கான மூலதனமாக மாறும்

35
மேஷம் - மேஷத்தில் சூரியன் உச்சம்

சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், 'திக்பலம்' பெற்று விளங்குவார். இதனால் உங்கள் ஆளுமைத் திறன் பளிச்சிடும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன அரசு சார்ந்த காரியங்கள், உரிமங்கள் அல்லது மானியங்கள் எளிதில் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்குச் சமூகத்தில் மதிப்புக் கூடும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், புதிய தொழில் முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

45
சிம்மம் - சூரியன் பெயர்ச்சி அதிர்ஷ்ட ராசிகள்

உங்கள் ராசி அதிபதியான சூரியன், பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் உச்சம் பெறுவது அபூர்வமான பலன்களைத் தரும். பிதுர் வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். தந்தையின் ஆதரவும், ஆலோசனையும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த காலகட்டம்.

55
மிதுனம்

உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் சூரியன் அமர்வதால், பொருளாதார ரீதியாக இது ஒரு பொற்காலம். மூத்த சகோதரர் அல்லது தந்தை வழியில் சொத்துக்கள் வந்து சேரலாம். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நிலம் மற்றும் வீடு தொடர்பான பிரச்னைகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories