Sun Transit 2026: சூரியன் பெயர்ச்சி ஆரம்பம்; இந்த 4 ராசிகளுக்கு அடுத்த 1 மாதம் கவனம் தேவை!

Published : Sep 17, 2026, 05:51 AM IST

Sun Transit 2026: இன்று (செப்டம்பர் 17) சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. சில ராசிகளுக்கு வேலை, பணம், குடும்பம் மற்றும் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். அந்த 4 ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

PREV
15
சூரிய பெயர்ச்சி ராசி பலன்கள்

இன்று (செப்டம்பர் 17) சூரியன் கன்னி ராசிக்கு மாறுகிறார். புதன் பகவானின் வீடான கன்னிக்கு சூரியன் செல்வதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். ஆனால் 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும் என ஜோதிடர்கள் எச்சரிக்கிறார்கள்.

25
மேஷம்

சூரியன் உங்கள் ராசியின் 6-வது வீட்டில் பயணிக்கிறார். இதனால் சில விஷயங்களில் நேரடி தாக்கம் இருக்கும். காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். காதல் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். பிரச்சனைகளை மனம் விட்டு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் நல்ல பலனைத் தரும்.

பரிகாரம்: 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

Visha Yoga : சந்திரனுடன் கை கோர்க்கும் சனி பகவான்.. விஷ யோகத்தால் சிக்கலில் சிக்கும் 5 ராசிகள்

35
ரிஷபம்

சூரியன் உங்கள் ராசியின் 5-வது வீட்டில் சஞ்சரிக்கிறார். அதனால் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது உஷாராக இருங்கள். முடிவுகள் எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தணும். குடும்ப விஷயங்களை ரொம்ப பொறுமையாக கையாளுங்கள். சில நேரங்களில் பொறுமையும் நிதானமும் ரொம்ப முக்கியம்.

பரிகாரம்: சூர்ய சாலிசா படியுங்கள்.

45
துலாம்

சூரியன் உங்கள் ராசியின் 12-வது வீட்டில் நுழைவதால் நேரடி தாக்கம் இருக்கும். நீங்களும் கொஞ்சம் உஷாராக இருக்கணும். அன்றாட செலவுகள் எகிற வாய்ப்புள்ளது. வரவுக்கும் செலவுக்கும் இடையே ஒரு பேலன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க. தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது; பயணங்களில் சவால்கள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் எந்த காரணத்திற்காகவும் அலட்சியம் வேண்டாம். உடல் சோர்வு அதிகரிக்கும், ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபட்டு, ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுங்கள்.

55
கும்பம்

சூரியன் உங்கள் ராசியின் 8-வது வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். வியாபாரம் மற்றும் தொழிலில் ரொம்ப கவனமாக இருங்கள். ரிஸ்க் எடுக்கும் முடிவுகளை தவிர்த்து விடுங்கள். எதிர்பாராத சில சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். கணவன் - மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு சிவப்பு நிற துணியை தானமாக வழங்குங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories