Shadashtak Yoga : சூரியன் – சனி மோதலால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்... 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் இதோ

Published : Oct 08, 2026, 02:31 PM IST

Sun–Saturn Clash Begins : கிரகங்களின் அரசனான சூரியனுக்கும், கர்ம வினைகளை அருளும் சனிக்கும் இடையே அக்டோபர் 17 அன்று ஷடாஷ்டக யோகம் உருவாகும். இதனால் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும்.

PREV
113
ஷடாஷ்டக யோகம் தரும் பலன்கள்

வேத ஜோதிடத்தில் சூரியனும் சனியும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களாகக் கருதப்படுகின்றன. சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளை குறிக்கும் நிலையில், சனி கர்ம பலன்கள், பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தாமதத்தை பிரதிபலிக்கிறது. இவ்விரு கிரகங்களும் இயல்பிலேயே பகைமை கொண்டதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றன. சூரியனுக்கும் சனிக்கும் இடையே 6 மற்றும் 8-ம் இடத் தொடர்பு ஏற்படும் போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த அமைப்பு சிலருக்கு மன அழுத்தம், உறவுகளில் கருத்து வேறுபாடு, பணிச்சுமை, உடல்நல ஏற்றத்தாழ்வு போன்ற சவால்களை ஏற்படுத்தக்கூடும்.

அக்டோபர் 17, அன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து வெளியேறி துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதே நேரத்தில் சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் இருக்கும் சூரியனுக்கும் மீனத்தில் இருக்கும் சனிக்கும் தொடர்பு ஏற்படுவதால் இந்தக் காலகட்டத்தில் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்பு ஒவ்வொரு ராசியினருக்கும் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். யாருக்கு எச்சரிக்கை தேவை, யாருக்கு சவால்களை சமாளிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை ராசி வாரியாக பார்க்கலாம்.

213
மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்தக் காலகட்டத்தில் திருமண வாழ்க்கை மற்றும் துணையுடனான உறவில் கூடுதல் பொறுமை தேவைப்படும். சிறிய விஷயங்களுக்குக்கூட வாக்குவாதம் உருவாகக்கூடும் என்பதால், அவசரமாக பதிலளிப்பதை தவிர்ப்பது நல்லது.

வாழ்க்கைத் துணையின் உடல்நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். தொழில் அல்லது வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் செயல்படும்போது ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கலாம் என்பதால் பணியிடத்திலும் விழிப்புடன் செயல்படுவது அவசியம். வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.

313
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஷடாஷ்டக யோகம் கலவையான பலன்களை வழங்கக்கூடும். போட்டியாளர்கள் சில தடைகளை உருவாக்கினாலும், உங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி அவற்றை சமாளிக்க முடியும். உடல்நலத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். குறிப்பாக செரிமானம் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக கவனம் செலுத்துவது நல்லது. கடன் வாங்குவது அல்லது பழைய கடன்களை நிர்வகிப்பது போன்ற நிதி விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

413
மிதுனம்

மிதுன ராசியினருக்கு குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் சில கவலைகள் ஏற்படலாம். காதல் உறவில் தேவையற்ற சந்தேகம் அல்லது தவறான புரிதல் உருவாக வாய்ப்புள்ளதால், மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறலைத் தவிர்த்து கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் குறிப்பாக அதிக ஆபத்துள்ள திட்டங்களில் அவசரமாக பணத்தை செலுத்தாமல் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

513
கடகம்

கடக ராசியினருக்கு குடும்பச் சூழலில் சில மன அழுத்தங்கள் ஏற்படலாம். குறிப்பாக தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்குவது தொடர்பான முடிவுகளில் அவசரப்பட வேண்டாம். ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே முடிவெடுக்கவும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து மோதல் ஏற்படாமல் நிதானமாக நடந்து கொள்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

613
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியே சூரியன் என்பதால், இந்தக் கிரக நிலை உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். சகோதரர் அல்லது சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் ஒவ்வொரு விபரத்தையும் கவனமாகப் படிப்பது அவசியம். பயணங்களின்போது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். உடல்நலத்திலும் அலட்சியம் வேண்டாம்.

713
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பண விஷயங்களில் எச்சரிக்கை மிகவும் அவசியம். வருமானம் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் காரணமாக சேமிப்பு குறையக்கூடும். குடும்பத்தில் பேசும் வார்த்தைகளில் கட்டுப்பாடு தேவை. சிறிய கருத்து வேறுபாடுகள் கூட பெரிய பிரச்சனையாக மாறக்கூடும். உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கண்கள், பற்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாமல் தேவையான கவனம் செலுத்துங்கள்.

813
துலாம்

இந்தக் காலகட்டத்தில் சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவதால், துலாம் ராசியினர் மீது இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் நேரடியாக இருக்கும். மனநிலையில் ஏற்றத்தாழ்வும், கோபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுயமரியாதை தொடர்பான விஷயங்களில் அதிக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற அவர்களுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தில் சிறிய அறிகுறிகளைக் கூட அலட்சியம் செய்யாமல் கவனித்துக்கொள்வது அவசியம்.

913
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவையில்லாத பயணங்கள் அல்லது எதிர்பாராத செலவுகள் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும். வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சில தடைகள் தோன்றலாம். நீதிமன்ற வழக்குகள், சட்ட விவகாரங்கள் அல்லது பிறருடனான தகராறுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நல்லது.

1013
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அதே நேரத்தில் சில தடைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். சகோதரர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கியவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. பணியிடத்தில் உங்களுடைய எதிர்காலத் திட்டங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பணம் தொடர்பான முடிவுகளில் நிதானம் மிகவும் அவசியம்.

1113
மகரம்

மகர ராசியினருக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சில சவால்கள் உருவாகலாம். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழ்நிலைகள் வரக்கூடும் என்பதால் பொறுமையாக செயல்படுவது நல்லது. அதிகப்படியான பணிச்சுமை உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், சவால்களை தைரியமாக எதிர்கொண்டு பணியிடத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்கு ஆராய்ந்து முடிவெடுத்தால் நிலைமையை சாதகமாக மாற்ற முடியும்.

1213
கும்பம்

கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தில் சில தடைகள் ஏற்படலாம். மதம், ஆன்மிகம் அல்லது சுப நிகழ்வுகள் தொடர்பான திட்டங்களில் எதிர்பாராத தாமதங்கள் இருக்கலாம். தந்தையின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் விட்டுக்கொடுத்து செல்வது உறவை மேம்படுத்தும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடின உழைப்பின் மூலம் தடைகளை கடக்க முடியும்.

1313
மீனம்

மீன ராசியினருக்கு இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக உணரப்படலாம். சனி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், சூரியன் எட்டாம் இடத்தில் இருப்பதால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். பருவநிலை மாற்றங்களால் உடல்நலத்தில் சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

எதிர்பாராத சூழ்நிலைகள் அல்லது துரதிர்ஷ்டமான சம்பவங்களை சந்திக்கும் வாய்ப்பும் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்துக்கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் குடும்பம் தொடர்பான விஷயங்களில் அதிகமாக தலையிடாமல் நிதானமாக அணுகுவது அவசியம். அதே நேரத்தில் ஆன்மிகம் மற்றும் தியானம் போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும்.

Read more Photos on
click me!

Recommended Stories