சனி, குரு சஞ்சாரம்: அடிக்க போகுது யோகம்; இந்த 3 ராசிக்கு பண மழைதான்!

Published : Apr 06, 2025, 07:01 PM IST

Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil : சனி மற்றும் குரு கிரகங்களின் நட்சத்திர மாற்றம் காரணமாக இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

PREV
15
சனி, குரு சஞ்சாரம்: அடிக்க போகுது யோகம்; இந்த 3 ராசிக்கு பண மழைதான்!
Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil

ஏப்ரல் மாதத்தில் சனி, குரு கிரகங்களின் நட்சத்திர மாற்றம் நிகழவுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் மாற்றங்கள் 12 ராசிகளையும் பாதிக்கும். கர்மாவை கொடுக்கும் சனி, மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு காரணமான குரு கிரகங்களின் நட்சத்திர சஞ்சாரம் சில ராசிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த ராசிகள் என்னென்ன? அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

25
Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil

ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் அவ்வப்போது ராசிகள், நட்சத்திரங்களை மாற்றுகின்றன. கிரகங்களின் மாற்றங்களால் 12 ராசிகளுக்கும் நல்ல, கெட்ட பலன்கள் உண்டு. ஏப்ரல் மாதத்தில் குரு, சனி கிரகங்கள் மிருகசீரிடம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் சில ராசிகளுக்கு நன்மை உண்டாகும். இது அவர்களுக்கு மிகவும் நல்ல நேரம். எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

35
Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil

கடக ராசிக்கான சனி குரு கிரகங்களின் மாற்றம் :

குரு, சனி கிரகங்களின் மாற்றங்கள் கடக ராசிக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளன. கடக ராசிக்கு குரு சாதகமாக இருக்கிறார். குரு நட்சத்திரம் மாறிய பிறகு இந்த ராசிக்கு நிறைய வாய்ப்புகள் வரும். இது அவர்களுக்கு சாதகமான காலம். தொட்டதெல்லாம் பொன்னாகும்.

45
Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil

சிம்ம ராசிக்கான சனி குரு சஞ்சாரம் பலன்

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்கு குரு சாதகமாக இருப்பதால் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதார ரீதியாக வளர்ச்சி இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் நல்லது நடக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

55
Saturn Jupiter Nakshatra Transit 2025 Predictions in Tamil

மகரம் ராசிக்கான குரு சனி சஞ்சாரம் பலன்

மகர ராசிக்கு இது நல்ல நேரம். உங்கள் ஆளுமையில் மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக லாபம் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories