ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், கர்ம வினை மற்றும் நீதிக்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். இவர் செய்யும் ஒவ்வொரு நிலை மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026 ஜூலை 27 அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கிய சனி பகவான், 138 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 11 அன்று மீண்டும் நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார்.
சனி பகவானின் இந்த நேரடி இயக்க மாற்றத்தால், நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற பல காரியங்கள் வேகம் எடுப்பதோடு, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான மாற்றங்களும் நற்பலன்களும் உண்டாகப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.