நவம்பர் 15 முதல் தடைபட்ட எல்லாத்துக்கும் வெற்றி; கோடீஸ்வர யோகம் தேடி வர போகிறது; யார் யாருக்கு தெரியுமா?

First Published | Nov 10, 2024, 8:03 AM IST

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil : வக்ர கதியில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வரும் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார். இது சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும். அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil : 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு முன்னதாக கும்ப ராசியில் வக்ரம் அடைந்த சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் டிராவல் செய்ய இருக்கிறார். இதுவரையில் தடை, தாமதங்களை கொடுத்து வந்த சனி பகவான் இனிமேல் ஒவ்வொரு ராசிக்கும் நற்பலன்களை கொடுக்க போகிறார்.

வரவேண்டிய பணம் திரும்ப கிடைக்கும். இழந்த அல்லது தவறவிட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க பெறுவீர்கள். தடைகள், தாமதங்கள் விலகும். யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Horoscope, Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

மேஷம்:

மேஷ ராசிக்கு லக்னத்திற்கு அதிபதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து எல்லா பலன்களை கொடுக்க போகிறது. அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரையில் தடை பட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். வெளிநாட்டு அல்லது வெளியூரில் வேலை கிடைக்க பெறுவீர்கள். திருமண விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tap to resize

Astrology, Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு 10ஆவது இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால், சஷ மகா புருஷ யோகம் உண்டாகும். இதுவரையில் சனி பகவானால் தடைபட்ட எல்லா யோக பலன்களும் திரும்ப கிடைக்க பெறுவீர்கள். தன யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். வேலை இல்லாத இளைஞர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும்.

2025 Sani Peyarchi, Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

கன்னி:

கன்னிக்கு 6ஆவது வீட்டில் இருக்கும் சனி இதுவரையில் உங்களுக்கு எல்லா தடைகளையும் கொடுத்து வந்தார். உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. எதிரிகளின் தொல்லை இருந்திருக்கும். இனிமேல் நவம்பர் 15 முதல் இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் பிறக்க போகுது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரம் விரிவடையும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு தேடி வரும்.

Saturn Transit 2025, Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

துலாம்:

துலாம் ராசிக்கு அதிபதியான சனி வக்ரம் அடைந்த நிலையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தடைபட்டது. இனி அந்த தடைகள் எல்லாம் விலக போகிறது. சனியின் வக்ர யாகத்தால் எல்லா சூழலும் சாதமாக போகிறது. திருமண முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். காதல் திருமணம் நடைபெற வாய்ப்புகள் தேடி வரும். சொத்து சுகம் கூடும். வருமானம் அதிகரிக்கும்.

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil, Sani Transit 2025

தனுசு:

சனி ராசிக்கு 3ஆம் இடத்து சனி பகவான் உங்களை வளர்ச்சி பாதையை நோக்கி கூட்டி செல்ல வேண்டும். ஆனால், சனியின் வக்ர பலன் உங்களுக்கு எல்லா கஷ்டங்களையும் கொடுத்தது. இனி அதற்கு விடிவுகாலம் பிறக்க போகிறது. நவம்பர் 15 முதல் உங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். உங்களது திறமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். பேரும், புகழும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil, Capricorn, Astrology, Makaram

மகரம்:

மகர ராசிக்கு இதுவரையில் இருந்த எல்லா தடைகளும் நீங்கும். வருமானம் படிப்படியாக உயரும். சொத்து சுகம் கூடும். சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

Latest Videos

click me!