Samasaptaga Yoga : செப்டம்பரில் உருவாகும் சமசப்தக யோகம்... ஒரு மாதத்திற்கு அடிமேல் அடிவாங்கப்போகும் 5 ராசிகள்

Published : Aug 26, 2026, 03:28 PM IST

September Astrology : சனி மற்றும் சூரியனின் நிலை சமசப்தக யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் சில ராசிகளுக்கு நிதிப் பிரச்சனைகளையும் சவால்களையும் உருவாக்கும்.

PREV
16
சமசப்தக யோகத்தின் தாக்கம்

ஜோதிடத்தில் சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான தன்மை கொண்ட கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவ்விரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் எதிரெதிர் நிலையில், அதாவது 180 டிகிரி கோணத்தில் அமையும் போது சமசப்தக யோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்பு அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.

வரும் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7:58 மணிக்கு சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில் சனி மீன ராசியில் இருப்பதால், சூரியனுக்கு நேர் எதிரான நிலையில் சனி அமைகிறது. இதன் காரணமாக சமசப்தக யோகம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. பின்னர் அக்டோபர் 19-ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு நகரும் வரை இந்த தாக்கம் தொடரும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.

இந்த காலகட்டத்தில் சில ராசியினர் பணம், வேலை, குடும்பம், உறவுகள் மற்றும் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

Mahalakshmi Raj Yoga : செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்... அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே செல்லப்போகும் 5 ராசிகள்...!

26
கும்பம்

சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் கும்ப ராசியினருக்கு பல்வேறு தடைகள் உருவாகலாம். வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதுடன், எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் அல்லது பணியிடத்தில் கூடுதல் முயற்சி மேற்கொண்டால்தான் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணம் தொடர்பான முடிவுகளில் அவசரப்படாமல் இருப்பது அவசியம். உடல்நலத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. எந்த முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் அதன் சாதக, பாதகங்களை நன்கு ஆராய்வது நல்லது.

36
மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும் உருவாகலாம்.

நிதி விஷயங்களில் கவனமாக செயல்படுவது அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால், சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படாமல் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். எந்த சவாலாக இருந்தாலும் மனம் தளராமல் எதிர்கொள்வது முக்கியம்.

46
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் செய்யும் காரியங்களில் தாமதம் மற்றும் தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த விஷயங்கள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். இதனால் மன அழுத்தமும் பதற்றமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பாமல் கடின உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களுடன் தேவையற்ற கருத்து மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதல் மற்றும் திருமண உறவுகளிலும் சிறிய பிரச்சனைகள் பெரிதாகாமல் பொறுமையுடன் அணுகுவது அவசியம்.

56
மீனம்

மீன ராசியினருக்கு சூரியன்-சனி எதிரெதிர் நிலை சற்று சவாலானதாக இருக்கலாம். குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத சூழல் ஏற்படலாம். இதனால் தன்னம்பிக்கை குறையும் நிலையும் உருவாகலாம்.

தொழிலில் கூடுதல் உழைப்பு தேவைப்படலாம். எதிரிகளின் செயல்பாடுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் கூடாது. இந்த காலத்தில் அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

66
கன்னி

சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் நிலையில், இந்த ராசியினருக்கு சமசப்தக யோகத்தின் தாக்கம் நேரடியாக உணரப்படலாம். பயணங்களின்போது உடமைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம்.

குடும்பத்தில் சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணியில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக பயணிப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories