Astrology: ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் டிசம்பர் 5ம் தேதி சனியின் சொந்த ராசியான மகர ராசிக்குள் நுழைகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகம் என்றும், மனித வாழ்வின் அதிர்ஷ்ட மாற்றங்களுக்குக் காரணமானவராகவும் ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான், வரவிருக்கும் டிசம்பர் 5ம் தேதி காலை 10:32 மணிக்கு, சனியின் சொந்த ராசியான மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த மாபெரும் ராகு பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தையும், நினைத்துப் பார்க்க முடியாத அதிஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று பார்ப்போம்.
25
சிம்ம ராசி - தடைகள் உடையும் காலம்
ராகுவின் இந்த இடமாற்றம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த சிறுசிறு முட்டுக்கட்டைகளையும் தவிடுபொடியாக்கும். கூட்டுத் தொழிலில் அபாரமான லாபம் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் கைகூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் கனவு நனவாகும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணப் பிரச்சனைகள் முற்றிலுமாகத் தீரும்.
35
துலாம் ராசி – பல வழிகளில் பணமழை
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி பொருளாதார ரீதியாக உச்சத்தைத் தொட வைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்க இதுவே பொன்னான காலம். பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசுப் பணி மற்றும் நல்ல வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்குப் புதிய உத்தரவு பிறக்கும். தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள் விலகும்.
விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ராகு பகவான் கொண்டு வரவுள்ளார். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்களின் திறமைக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களும், ஊதிய உயர்வும் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேர்க்கும் செய்திகள் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பெற்றோரின் சம்மதத்துடன் காதல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணையப் போகிறார்கள். வீட்டில் சுப காரியங்கள் களைகட்டும்.
55
மகர ராசி – சொத்து சேர்க்கை
ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால், உங்களுக்குச் செல்வாக்கும், அதிர்ஷ்டமும் இரட்டிப்பாகும். புதிய வீடு, நிலம், வாகனம் மற்றும் தங்கம் வாங்கும் யோகம் மிகச் சிறப்பாகக் கூடி வந்துள்ளது. கிடப்பில் போடப்பட்ட காரியங்கள் அனைத்தும் உடன் பிறந்தவர்களின் உதவியுடன் வேகம் பெறும். போட்டித் தேர்வுகளில் எழுதும் மாணவர்களுக்குத் தடையற்ற வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வருமானம் பலமடங்கு உயரும்.