Tamil Horoscope: ராகுவால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்... பணமழை கொட்டப் போகுது!

Published : Sep 18, 2026, 04:49 PM IST

Tamil Horoscope: 2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. மகர ராசிக்கு மாறும் ராகுவால், ஜூன் 2028 வரை இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகிறது.

PREV
16
ராகு பெயர்ச்சி 2026

ஜோதிட பஞ்சாங்கத்தின்படி, 2026 நவம்பர் 25 அன்று ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறார். ஜூன் 2028 வரை அவர் இதே ராசியில் இருப்பார். இதனால் எந்த 5 ராசிக்காரர்களுக்குத் திடீர் பணவரவும் அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

26
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி ஒரு ராஜயோகத்தைக் கொடுக்கப் போகிறது. பல வருடங்களாக இழுபறியில் இருந்த வேலைகள் இனி விரைவில் முடியும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் திடீர் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். இந்தக் காலத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் இரட்டிப்பு பலனைத் தரும்.

36
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய வெற்றியைத் தரும் நேரமாகும். உங்களுக்கு எதிரியாக இருந்தவர்கள் கூட இனி நண்பர்களாக மாறிவிடுவார்கள். நீண்ட காலமாக இருந்த பெரிய கடனை அடைத்துவிடுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். ரியல் எஸ்டேட் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நீண்ட கால கனவுகள் இந்தக் காலத்தில் நனவாகும்.

46
துலாம் ராசி

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு பெயர்ச்சியால் ஏகப்பட்ட லாபம் கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்த நிலப் பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். புதிய வீடு வாங்கும் யோகம் உள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பெரிய லாபம் பார்க்கலாம். ஆன்மீக மற்றும் தொண்டு பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

56
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சமூகத்தில் உங்களுக்கான மரியாதையும் செல்வாக்கும் பல மடங்கு உயரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பெரிய வெற்றியைத் தேடித் தரும். அரசியலில் இருப்பவர்களுக்குப் பெரிய பதவியும் புகழும் கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் அமையும்.

66
மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிகவும் நேர்மறையாக இருக்கப் போகிறது. பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீரென பெரிய அளவில் பணம் கைக்கு வரும். உங்கள் நண்பர்களும் சகோதரர்களும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அதிர்ஷ்டமும் சந்தோஷமும் எப்போதும் உங்களுடவே இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories