Kujaketu Yoga : சிம்மத்தில் உருவாகும் குஜகேது யோகம்... நவம்பரில் இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!

Published : Oct 22, 2026, 02:43 PM IST

Mars-Ketu Conjunction : செவ்வாய் விரைவில் சிம்ம ராசியில் பிரவேசித்து, செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையை உருவாக்கும். இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு மிகவும் அசுபமானதாக இருக்கும்.

PREV
16
குஜகேது யோகத்தால் மாறப்போகும் கிரகங்களின் ஆட்டம்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றின் கூட்டணியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், வரும் நவம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் உருவாகவுள்ள செவ்வாய் - கேது சேர்க்கை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாகக் கணிக்கப்படுகிறது.

ஜோதிடக் கணிப்புகளின்படி, நவம்பர் 12ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே அந்த ராசியில் பயணித்து வரும் கேதுவுடன் செவ்வாய் இணைவதால் செவ்வாய் - கேது யோகம் உருவாகிறது. கேது நவம்பர் 25ஆம் தேதி வரை சிம்மத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சவாலான காலகட்டமாக அமையக்கூடும்.

ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், வேகம், ஆற்றல், கோபம் மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களின் காரகனாகக் கருதப்படுகிறார். அதேசமயம், கேது எதிர்பாராத திருப்பங்கள், பற்றின்மை மற்றும் திடீர் மாற்றங்களுடன் தொடர்புடைய கிரகமாகப் பார்க்கப்படுகிறார். இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைவதால் சிலருக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகலாம். அதேவேளையில், சில ராசிக்காரர்கள் பணம், குடும்ப உறவுகள், தொழில் மற்றும் தனிப்பட்ட முடிவுகளில் கூடுதல் நிதானத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். அந்த வகையில், செவ்வாய் - கேது சேர்க்கையால் நவம்பர் 25 வரை கவனமாக இருக்க வேண்டிய ஐந்து ராசிகள் குறித்த ஜோதிடப் பலன்களைப் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் - கேது கூட்டணி ஐந்தாம் வீட்டில் உருவாகிறது. ஜோதிடத்தில் ஐந்தாம் வீடு காதல், குழந்தைகள், கல்வி, படைப்பாற்றல் மற்றும் முதலீடுகளைக் குறிக்கும் இடமாகும். இதனால் இந்தக் காலகட்டத்தில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக, காதல் வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள்கூட தேவையற்ற வாக்குவாதமாக மாற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. துணையுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது உறவில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் ஈடுபடுபவர்கள் முழுமையான தகவல்களை அறியாமல் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் தொடர்பான விஷயங்களிலும் கோபத்தைவிட பொறுமைக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.

36
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை இரண்டாம் வீட்டில் நிகழ்கிறது. குடும்பம், பணவரவு, சேமிப்பு மற்றும் பேச்சுத்திறனைக் குறிக்கும் இடம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, குடும்பத்தில் பணம் தொடர்பான விவாதங்கள் எழும்போது கோபத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாகத் தொடங்கும் உரையாடல்கூட பெரிய கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுக்கலாம் என ஜோதிட ரீதியாகக் கூறப்படுகிறது.

அதேபோல், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம். பெரிய தொகையை யாருக்காவது கடனாக வழங்குவது, அவசரமாக முதலீடு செய்வது அல்லது அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்குவது போன்ற விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுவது நல்லது. வேலை மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களின் பேச்சால் புதிய பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிதானமான அணுகுமுறையே இந்தக் காலகட்டத்தில் பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

46
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், செவ்வாயும் கேதுவும் சிம்ம ராசியின் முதல் வீட்டிலேயே ஒன்றிணைகின்றன. இதனால் தனிப்பட்ட வாழ்க்கை, தன்னம்பிக்கை, குணநலன் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கணிக்கப்படுகிறது. வழக்கத்தைவிட கோபம் அல்லது அவசரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சிறிய விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அவசியம்.

பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை உடனடியாக நிராகரிக்காமல், அவற்றில் உள்ள பயன்களை ஆராய்ந்து செயல்படுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய வணிக முடிவுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டாம். அதேபோல், வாகனப் பயணங்களின்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதும் நல்லது.

56
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் - கேது சேர்க்கை பன்னிரண்டாம் வீட்டில் அமைகிறது. ஜோதிடத்தில் இந்த இடம் செலவுகள், வெளிநாட்டுப் பயணம், தனிமை மற்றும் உறக்கம் உள்ளிட்ட விஷயங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, வருமானத்திற்கு ஏற்றவாறு செலவுகளைத் திட்டமிடுவது நல்லது. ஆடம்பரப் பொருட்களுக்காக அதிக தொகையைச் செலவிடுவதைத் தவிர்க்கலாம்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் நீண்டதூரப் பயணங்களுக்குத் தயாராகி வருபவர்கள் தங்களின் பயண ஆவணங்கள், அனுமதிகள் மற்றும் இதர முக்கிய விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது நல்லது. அதேபோல், வேலைப்பளு காரணமாக ஓய்வையும் தூக்கத்தையும் புறக்கணிக்க வேண்டாம். மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அன்றாடப் பணிகளை முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுவது இந்தக் காலகட்டத்தை எளிதாகக் கடக்க உதவும்.

66
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் கேதுவின் கூட்டணி எட்டாம் வீட்டில் உருவாகிறது. இந்த இடம் திடீர் மாற்றங்கள், வரி, காப்பீடு, முதலீடு மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. இதனால் பணம் தொடர்பான விஷயங்களில் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, ஏற்கனவே செய்துள்ள முதலீடுகள், வரி செலுத்துதல் மற்றும் காப்பீடு தொடர்பான பணிகளைத் தள்ளிப்போடாமல் உரிய நேரத்தில் முடிப்பது நல்லது.

வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்வது அவசியம். யாருடைய வாக்குறுதியையும் மட்டும் நம்பி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். மேலும், வாகனங்களை இயக்கும்போது போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள நினைப்பவர்கள் அவசரப்படாமல், சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories