நவம்பர் மாதத்தில் குரு சிம்ம ராசியின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். கேதுவும் அதே பாதத்தில் இருக்கிறார். நவம்பர் 12-ம் தேதி செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதே சமயம், இந்த காலகட்டத்தில் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். நவம்பர் 6-ம் தேதி சுக்கிரன் வக்ர கதியில் கன்னி ராசிக்குள் நுழைகிறார். பிறகு, நவம்பர் 14-ம் தேதி பெயர்ச்சி ஆகிறார். இதைத் தொடர்ந்து, நவம்பர் 22-ம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு மாறுகிறார். நவம்பர் 13-ம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் பிறகு, நவம்பர் 16-ம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். சனி மாதம் முழுவதும் மீன ராசியில் வக்ர கதியில் இருப்பார். ராகு கும்ப ராசியில் இருப்பார்.
EPFO வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்.! இனி மாதம் ரூ.3,000 பென்ஷன் கிடைக்குமா?