Birth Month : இந்த 4 மாதங்களில் பிறந்தவங்க கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. ரொம்ப மோசமானவங்க!!

Published : Aug 16, 2025, 06:12 PM IST

ஜோதிடத்தின்படி, எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Most Aggressive Birth Moth

இந்து மதத்தில் ஜோதிடத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த ராசி, நட்சத்திரம், மாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது ஆளுமை மற்றும் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. பெரும்பாலும் அவர்களுக்கு கோபம் வந்தால் வாயால் பேசுவதை விட கையால் தான் அதிகம் பேசுவார்களாம். அது என்னென்ன மாதம் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மார்ச்

ஜோதிடத்தின்படி, மார்ச் மாதம் பிறந்தவர்கள் ரொம்பவே மூர்க்கமுள்ளவர்களாகவும், சண்டையிடும் குணம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்களாம். இவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள் மற்றும் துடிப்பானவர்கள் என்பதால் சண்டையில் ஒருபோதும் பின் வாங்கவே மாட்டார்களாம். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். இந்த குணத்தால் சிறிய பிரச்சினைக்கு கூட அதிகமாக கோபப்படுவார்களாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சவாலான சூழ்நிலைகளை விரும்புவதால் பெரும்பாலும் ஆக்ரோஷமான மனநிலையில் தான் இருப்பார்களாம். எளிதில் கோபப்பட்டாலும் விரைவில் அமைதியாகி விடுவார்களாம். முக்கியமாக இவர்கள் வெறுப்பை மனதில் ஒருபோதும் வைக்கவே மாட்டார்களாம். ஆனால் அடிக்கடி கோபப்படுவார்களாம்.

35
மே

ஜோதிடத்தின்படி, மே மாதம் பிறந்தவர்கள் ரொம்பவே மன உறுதி உடையவர்களாகவும். அமைதியாகவும் இருப்பார்களாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த அளவிற்கு அமைதியாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு அமைதியாக இருப்பாங்க. ஒருவேளை பொறுமையை இழந்தால் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அந்த அளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்களாம். இவர்கள் பகையை மனதில் வைத்துக்கொண்டு காலம் சமயம் பார்த்து அதை வெளிப்படுத்துவார்களாம்.

45
ஆகஸ்ட்

ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவங்க ரொம்பவே தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இவர்கள் அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ வன்முறையில் ஈடுபடுவார்கள். இவர்கள் வலுவான சுயமரியாதை உடையவர்களாக இருப்பதால் அதை பாதுகாக்க துணிச்சலுடன் போராடுவார்களாம். பொதுவாக இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே கருணை குணம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய சுயமரியாதை புண்படும் போது அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே இவர்கள் தங்களது கோபத்தை தீர்த்துக் கொள்ள எந்த எல்லைக்கும் கூட சில தயங்க மாட்டார்கள்.

55
நவம்பர்:

ஜோதிடத்தின்படி, நவம்பர் மாதத்தில் பிறந்தவங்க லட்சியவாதிகளாக இருப்பார்களாம். இவர்களது லட்சியத்தில் யாராவது தலையிட்டால் அவர்கள் ரொம்பவே மூர்க்க குணமுள்ளவர்களாக மாறிவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவங்க தங்களுடைய இலட்சியத்தை அடைய அதிகாரத்தைக் கூட தவறாக பயன்படுத்த தயங்க மாட்டார்களாம். இவர்கள் ஒருவரை பழிவாங்க நினைத்தால் அவர்களை விட்டு விட மாட்டார்கள். கடுமையாக நடந்து கொள்வார்களாம்.

Read more Photos on
click me!

Recommended Stories