மேஷத்தில் இணையும் 5 சுப கிரகங்கள்.! கோடீஸ்வரனாக மாறப்போகும் 4 ராசிகள்.! பொன், பொருள், சொத்துக்கள் குவியப் போகுது.!

Published : Apr 29, 2026, 11:31 AM IST

Panchagrahi Yog Lucky Zodiac Signs : மேஷ ராசியில் 5 கிரகங்கள் இணைவதால் பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக நான்கு ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது. அது குறித்து இந்த விரிவாகப் பார்க்கலாம். 

PREV
16
Panchagrahi Yog Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு. கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றாக சேரும் பொழுது சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் மே 2026 மேஷ ராசியில் 5 கிரகங்கள் ஒன்றாக இணைய உள்ளன. சூரியன், சந்திரன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் சங்கமிக்கும் பொழுது பஞ்சகிரக யோகம் உருவாகிறது.

26
பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் தளபதியான செவ்வாய் இளவரசன் புதன், சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் மற்றும் சந்திரன் என ஐவரும் ஒரே ராசியில் இணைவது என்பது சக்தி வாய்ந்ததாகவும், மிகப்பெரிய ஆற்றலை பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. மேஷம் என்பது ராசி சக்கரத்தின் முதல் ராசியாகவும் நெருப்பு ராசியாகவும் விளங்குகிறது. இங்கு கிரகங்கள் இணைவதன் மூலம் நான்கு ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.

36
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த ஐந்து கிரகங்களும் அமர இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளைப் பெற இருக்கின்றனர். 5 கிரகங்களின் நற்பலன்களும் ஒரே புள்ளியில் குவிவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். 

பெற்றோர்களின் ஆதரவோடு பிரச்சனைகளை பேசி சரி செய்வீர்கள். பொன், பொருள் சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. வேலையில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி, நிம்மதி கிடைக்கும். குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்பு என அனைத்திலும் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் அகலும்.

46
மிதுனம்

மிதுன ராசியின் 11வது வீடான லாப ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் அமைகிறது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான பொற்காலம் தொடங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள் பழைய தொழிலை விரிவுபடுத்தி புதிய கிளைகளை தொடங்குவீர்கள். 

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும், பெருமையும் சேரும். இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கும் யோகம் உண்டாகும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதை சமாளிக்கும் துணிச்சலும், ஆற்றலும் பிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். முக்கிய முடிவுகள் லாபம் தரும். மூத்த சகோதரர்கள் வழியில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் முன்னேற்றத்தை அடையும்.

56
சிம்மம்

சிம்ம ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் 5 கிரகங்களின் சேர்க்கை நடைபெற்று பஞ்சகிரக யோகம் அமைய இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெருகும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்வி கற்க விரும்புவர்களின் கனவு நனவாகும். தான தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். கௌரவமான பதவிகள் கிடைக்கும். 

அதிகாரமிக்க அரசு பதவிகள், அரசியல் செல்வாக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களை கெடுக்க நினைத்த எதிரிகள் வீழ்ந்து போவார்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரைவில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பொன், பொருள், நகை, ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது.

66
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. ஐந்தாம் வீட்டில் ஐந்து கிரகங்களும் அமர்வது சுபமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தடைபட்டு நின்றிருந்த சுப காரியங்கள் வேகம் எடுக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படும். பழைய முதலீடுகளில் இருந்து பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். 

முடிக்க முடியாது என்று நினைத்த காரியங்களை கூட முடித்துக் காட்டுவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும். பழைய கடன்களை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். நாள்பட்ட வியாதிகள் மறைந்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories