
எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்):
எண் 1-ல் பிறந்தவர்களுக்கு தலைமைப் பண்புகள் வெளிப்படும்.செப்டம்பர் மாதம் புதிய தொடர்புகளை உருவாக்குவார்கள். தொழில் வாழ்க்கையில் ஒரு பெரிய முடிவு அல்லது புதிய தொடக்கம் ஏற்படலாம். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பையும் பெறலாம். பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
1ஆம் தேதி பிறந்தவர்கள்:
1ஆம் தேதி பிறந்தவர்களுக்கு பணவரவு அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைந்த காலமாக செப்டம்பர் மாதம் இருக்கும். தொழில் அல்லது வேலையில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். எதிர்பாராத பணவரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சேமிப்பில் கவனம் செலுத்துவதுடன், நீண்டகால நிதி திட்டங்களை உருவாக்குவது நல்ல பலனைத் தரும்.
எண் 2 (எந்த மாதத்திலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்):
எண் 2-ல் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் உறவுகளில் அதிக தெளிவு பிறக்கும் . நீண்ட நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி, உறவுகளில் நல்ல புரிதல் ஏற்படும். திருமணம் அல்லது பார்ட்னர்ஷிப் தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய மாற்றங்களும் ஏற்படலாம்.
3ஆம் தேதி பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். எண் 3 (எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள்) கல்வி, கற்பித்தல் மற்றும் ஆலோசனைத் துறைகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த மாதம் அவர்களின் திறமைக்கு மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். முக்கியமான பொறுப்புகள் கிடைக்கலாம். அதேபோல் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து, மன அமைதியைத் தேடும் எண்ணமும் உருவாகும்.
எண் 4 (எந்த மாதத்திலும் 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள்):
எண் 4-ல் பிறந்தவர்களுக்கு வேலையில் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலை அல்லது தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய பொறுப்புகள் மற்றும் பணிச்சூழலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது இந்த ஆண்டு நல்ல பலன்களைத் தரும்.
5ஆம் தேதி பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமும் லாபமும் நிறைந்ததாக இருக்கும். எண் 5 (எந்த மாதத்திலும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்) இந்த மாதத்தில் பயணங்கள் மூலம் நல்ல வாய்ப்புகளையும் ஆதாயங்களையும் பெறலாம். மார்க்கெட்டிங், பிசினஸ் மற்றும் மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது தொடர்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். நட்பு வட்டம் பெரிதாகும். நீண்ட நாட்களாக வெளிப்படுத்த முடியாமல் இருந்த புதிய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
6ஆம் தேதி பிறந்தவர்கள்: செப்டம்பரில் சொத்து யோகம்!
6ஆம் தேதி பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் உறவுகள் வலுப்பெறும் காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். வீடு அல்லது சொத்து வாங்குவது தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே நேரத்தில், மற்றவர்களின் தேவைகளை மட்டுமே கவனிக்காமல், உங்களுடைய சுய தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்வீர்கள்.
7ஆம் தேதி பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். எண் 7 (எந்த மாதத்திலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்) இந்த மாதத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து, பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்பு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் நிர்ணயித்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
8ஆம் தேதி பிறந்தவர்கள்: செப்டம்பரில் உழைப்புக்கு பலன்!
8ஆம் தேதி பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். எண் 8 (எந்த மாதத்திலும் 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள்) நீண்ட நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றத்தைக் காணலாம். இருப்பினும், எதிர்பார்த்த பலன்கள் உடனடியாக கிடைக்காமல் சற்று தாமதமாக வரலாம். எனவே பொறுமையுடன் செயல்படுவது அவசியம். ஒழுக்கம் மற்றும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் இந்த மாதத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும்.
9ஆம் தேதி பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமானதாக இருக்கும். எண் 9 (எந்த மாதத்திலும் 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்) நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பழைய வேலைகளை முடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். தொழில் மற்றும் பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து, பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், சொத்து வாங்கும் யோகமும் உருவாகலாம். சமூகத்தில் முக்கியமான பொறுப்பை வகிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த மாதத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரக்கூடும்.