விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்:
Visuvavasu Tamil Puthandu Palan in Tamil : 2025 ஆம் ஆண்டில் குரோதி வருடம் முடிந்து வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு (Tamil New Year 2025) பிறந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளை நாம் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறோம். இந்த புத்தாண்டு விசுவாவசு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த விசுவாவசு (Visuvaavasu Tamil Puthandu) தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலனை கொடுக்கு என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
மேஷ ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்:
அலுவலகத்தில் உங்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வும், இடமாற்றம் கிடைக்க பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
வருமானம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். அலுவலகத்தில் புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்:
உங்களது தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது திறமைக்கு மதிப்பு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும் யோகம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். வீண் பழி வரலாம்.
மிதுனம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்:
புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு கடினமாக உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பதவி உயர்வு தாமதம் ஆகும்.
மகரம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொட்டது துலங்கும். அமைதியாக இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் கூடாது.
துலாம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
கும்ப ராசியை பொறுத்த வரையில் தமிழ் புத்தாண்டில் நிதானமாக செயல்பட வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
சிம்மம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
திருமணம் கை கூடி வரும். உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். யாரையும் புண்படும்படி பேசக் கூடாது. மற்றபடி உங்களுக்கு அற்புதமான ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு அமைகிறது.
கன்னி ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொட்டது துலங்கும் அற்புதமான ஆண்டு.
மீனம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். வரவை விட செலவுகள் கூடும். பொறுமையை கடைபிடிப்பது அவசியம். வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம் ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.