Mesham to Meenam Nov 15 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!

Published : Nov 15, 2025, 06:00 AM IST

November 15 Daily Horoscope for 12 zodiac signs: நவம்பர் 15, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
November 15 Today Rasi Palangal

மேஷம்:

இன்று உற்சாகமாகவும், துடிப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் அவசரம் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

ரிஷபம்:

நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். புதிய முதலீடுகள் குறித்து சிந்திப்பீர்கள். அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்:

இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்புக்கூடும். நண்பர்களின் ஆதரவு பலமாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிடாமல் செலவு செய்ய வேண்டாம்.

கடகம்:

மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி புதிய தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

சிம்மம்:

உங்களின் தன்னம்பிக்கை இன்று உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைபட்டு நின்ற காரியங்கள் வேகம் எடுக்கும். நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் முடிவுகளில் பிறரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். நிதானத்துடன் செயல்படுங்கள்.

கன்னி:

இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை கணிசமாக உயரும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

துலாம்:

இன்று சாதகமான இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். இருப்பினும் அதிகப்படியான நம்பிக்கை தேவை இல்லை. முக்கிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

மனதளவில் சில சலசலப்புகள் ஏற்படலாம். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தாமதமாக கிடைக்கலாம். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சனியின் பார்வையால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்தவும். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும்.

தனுசு:

இன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். தொழில் ரீதியாக பயணம் செல்ல நேரிடலாம். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்து இடுதுவதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும்.

மகரம்:

இன்று பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சவால்களை சந்திக்க நேரிடலாம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் வசமாகும். தேவையற்ற கவலைகளை தவிர்க்க தியானம் செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கும்பம்:

இன்று இலக்குகளை நோக்கி உறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு நல்ல நாளாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வார்த்தைகளின் நிதானம் தேவை. தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவடையும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்படவும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories