சனி: மாதத்தின் ஆரம்பம் முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதனால் செலவுகள் அதிகமாக இருக்கும். அத்துடன், வேலை தொடர்பான பயணங்களும் அதிகரிக்கும்.
சூரியன், புதன், கேது: இந்த மூன்று கிரகங்களும் மாதத் தொடக்கத்தில் ஐந்தாம் வீட்டில் ஒன்றாகச் சஞ்சரிக்கும். இது உங்களுக்கு உடல் நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்க் கூடும். கவனமாக இருப்பது நல்லது. மேலும், செலவுகளும் அதிகரிக்கக்கூடும். அது மருத்துவ செலவாக கூட இருக்கலாம். சேமிப்பில் அக்கறை காட்டுவது நன்மை அளிக்கும்.
செவ்வாய்: உங்கள் ராசி அதிபதியான செவ்வாய், மாதத் தொடக்கத்தில் 6ஆம் வீட்டில் இருப்பார், பின்னர் 7ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி அடைவார். இதனால் உடல்நலத்தில் சில குறைபாடுகள் ஏற்படக்கூடும். காதல் மற்றும் திருமண உறவுகளில் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது.
ராகு: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரிப்பார்.
குரு: குரு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் இருப்பார். இது புதிய தொழில் கூட்டாண்மைகளுக்கும், வணிக ஒப்பந்தங்களுக்கும் சாதகமாக இருக்கும்.