Mesha Rasi Rahu Ketu Peyarchi 2025 Palan Tamil : ஒவ்வொரு ஒன்றரை ஆண்டுகளுக்கும் ஒருமுறையும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அப்படி நிகழும் இந்த பெயர்ச்சியானது இந்த வருடம் வாக்கியப பஞ்சாங்கப்படி வரும் ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் மே மாதம் 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி 2025 நிகழ்கிறது.
28
அப்படி வரும் 26ஆம் தேதி நிகழும் ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கி நகர்வார். அதே போன்று கேது பகவானும் பின்னோக்கி நகர்வார். அதன்படி கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராகு கேது பகவான் மேஷ ராசிக்கு எந்த மாதிரியான பலனை கொடுக்கும் என்று இந்த தொகுப்பில் முழுவதுமாக நாம் பார்க்கலாம்.
38
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்:
மேஷ ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். லாபம் என்றால் பொருளாதாரத்தில் முன்னேற்றம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். லாபம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். கையில் காசு, பணம் தாராளமாக இருக்கும். இதுவரையில் வாடகை வீட்டிலிருந்த நீங்கள் இனி சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்றத்தை காண்பீர்கள்.
48
rahu ketu peyarchi palan 2024
குடும்பம் ஒன்று சேரும்:
பிரிந்திருந்த குடும்பம் ஒன்று செரும். சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வியில் சேர்ந்து நன்றாக படிப்பார்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் தேடி வரும். சொத்து, சுகம் சேரும். ராகுவினால் எல்லாமே நல்லதாக நடக்கும்.
58
rahu-ketu ke upay
மேஷம் ராசி – ராகு கேது பெயர்ச்சி 2025 பலன்
கேதுவினால் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் நன்மைகள் நடக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள். தாய்மாமன் வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். புதிதாக சொத்து வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும். ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முதுகுவலி, தலைவலி பிரச்சனைகள் சரியாகும்.
68
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை
விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சுபசெலவுகளாக மாற்றுவது நல்லது. அலுவலகத்தில் இடமாற்றம் தேடி வரும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல யோகம் தேடி வரும்.
78
அலைச்சல் அதிகரிக்கும்
அரசியல்வாதிகளுக்கு கட்சி தொடர்பான பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். கையிருப்பு கரையும் நேரம் இது. இசைத்துறையை சார்ந்தவர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு அதனால் பேரும் புகழும் கிடைக்கப் பெறுவார்கள். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்து முடியும்.
88
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2025 பரிகாரம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்களாச்சேரியில் உள்ள ராகு கேது தோஷத்தை நீக்கும் பரிகார தலமாக விளங்கும் நாகநாதசுவாமி கோயிலில் உள்ள நாகநாதரை வழிபட்டு வர எல்லா நன்மையும் உண்டாகும்.
வராகி அம்மனை வழிபட எல்லா குழப்பங்களும் நீங்கி தெளிவு பிறக்கும்.