ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன் பகவான், அறிவுக்கூர்மை, திறமையான பேச்சு, கல்வி மற்றும் வணிகத்தின் காரணியாக விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 24 அன்று துலாம் ராசியில் புதன் வக்ர நிலையில் (Retrograde) தனது பயணத்தைத் தொடங்க உள்ளார். கிரகங்களின் இந்த நிலை மாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் வெற்றியையும் அள்ளித் தரப் போகிறது.
இந்தக் காலகட்டத்தில் தங்களின் பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாய்ப்பும், தடைபட்ட வேலைகள் தடையின்றி நடப்பதும் சில ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. அந்த வகையில், புதனின் வக்ரப் பெயர்ச்சியால் தொழில் ரீதியாகப் பொற்காலம் காணப் போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.