Astrology: ஜூலை 24 முதல் புதனின் நேரடி இயக்கம்! இந்த 3 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறது!

Published : Jul 21, 2026, 12:59 PM IST

Budh Margi 2026: ஜூலை 24 முதல் மிதுன ராசியில் புதன் தனது நேர் பாதையைத் தொடங்குகிறார். இந்த சுப இயக்கத்தால், குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம், நிதி வளம் மற்றும் தொழில் முன்னேற்றம் போன்ற அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும்.

PREV
14
புதன் பகவான்

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கிரகம் புதன். ஜோதிட சாஸ்திரத்தில் புத்தி கூர்மை, பேச்சுத் திறன் மற்றும் வியாபாரத்திற்கு அதிபதியாக கருதப்படும் புதன் பகவான். ஜூலை 24-ம் தேதி முதல் மிதுன ராசியில் தனது நேர் பாதையை தொடங்குகிறார். புதனின் இந்த சுப இயக்கத்தினால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிவேகமாக நடக்கும். 12 ராசிகளிலுமே மாற்றங்கள் ஏற்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் திடீர் யோகமும், அதிர்ஷ்ட மழையும் பொழியப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை பார்ப்போம்.

24
மிதுன ராசி

மிதுன ராசியின் அதிபதியான புதன், இந்த ராசியிலேயே நேரடி இயக்கத்திற்கு வருவதால், இவர்களுக்கு மிகச் சிறந்த பொற்காலம் தொடங்குகிறது. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் வேகம் பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, விரும்பிய பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் சிறப்பான வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விடப் பலமடங்கு வலுவடையும்.

34
கன்னி ராசி

கன்னி ராசிக்கும் அதிபதியாகக் திகழும் புதன் பகவானின் இந்த நேர் பாதை, இவர்களுக்கு அடுத்தடுத்து நற்செய்திகளை அள்ளித் தரும். வேலை மாற்றத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும்.

44
கும்ப ராசி

புதனின் சுப நகர்வினால் கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகிறது. புதிய வருமான வழிகள் உருவாகி பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்த அரசு தொடர்பான வேலைகள் மற்றும் சட்ட சிக்கல்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இனிமை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைக்குத் தகுந்த பாராட்டும், பதவியுயர்வும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

Read more Photos on
click me!

Recommended Stories