Mercury Combust: செப். 18 வரை கவனம் தேவை.! 4 ராசிகளுக்கு வரும் சிக்கல்.! பரிகாரம் இதுதாதன்.!

Published : Aug 20, 2026, 10:32 AM IST

சூரியன் ஆகஸ்ட் 17-ல் சிம்ம ராசிக்கு சென்றார். இப்போது ஆகஸ்ட் 22-ல் புதனும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 18 வரை புதன் அஸ்தமன நிலையில் இருப்பார். இது 4 ராசிக்காரர்களுக்கு சில கஷ்டங்களைக் கொடுக்கலாம்.

PREV
14
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாகவோ, யோசிக்காமலோ பேசினால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் உங்கள் பேச்சு அல்லது செயல்பாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். இதனால் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் ரீதியாகவும் அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு, அதன் தாக்கம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெளிப்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத செலவுகள் அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் சூழல் இருப்பதால், பண விஷயங்களில் நிதானமாக செயல்படுவது அவசியம்.

24
கன்னி ராசி

கன்னி ராசியின் அதிபதியாக புதன் விளங்குகிறார். புதன் அஸ்தமனமாகும் காலகட்டத்தில், கன்னி ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவசரப்பட்டு எந்தவொரு பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அதிக தொகை தொடர்பான முதலீடுகள் மற்றும் கொடுக்கல், வாங்கலில் நிதானம் அவசியம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அவசர முடிவுகள் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம். மேலும், அறிமுகமில்லாத நபர்களை நம்பி பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் ஏமாற்றம் அல்லது மோசடி ஏற்பட வாய்ப்புள்ளதால், முக்கியமான பண முடிவுகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது சிறந்தது.

இந்த கட்டுரையையும் படித்து பாருங்களேன். https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-good-times-begin-for-these-5-zodiac-signs-4-zodiac-signs-set-to-achieve-major-career-success-1rfbrbk

34
சிம்ம ராசி

புதன் சிம்ம ராசியில் அஸ்தமனமாகும் காலகட்டம் என்பதால், இந்த ராசிக்காரர்கள் உடல்நலம் மற்றும் பணியிட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கலாம். அதேபோல், வேலை செய்யும் இடத்தில் மறைமுக எதிரிகளால் தேவையற்ற தொல்லைகள் அல்லது பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் பணிகளை கவனமாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். சிறிய கவனக்குறைவு கூட எதிர்பாராத நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அமைதியாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

இந்த கட்டுரையையும் படித்து பாருங்களேன். https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-5-lucky-nakshatras-fortune-wealth-are-about-to-shower-kfd35ey

44
விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமன காலம் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடியதாக இருக்கலாம். வேலை மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் ஏற்படும் குழப்பங்கள் மனதில் அதிக பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏற்கனவே ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள், தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணம் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், முடிந்தவரை சில காலம் தள்ளிப்போடுவது பாதுகாப்பானது. எதிர்பாராத செலவுகள் காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். எனவே தேவையற்ற செலவுகளை குறைத்து, பணத்தை திட்டமிட்டு பயன்படுத்துங்கள். குடும்பத்தில் சிறிய விஷயங்களுக்குக்கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பதற்றமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. பொறுமையுடனும், நிதானமாகவும் செயல்பட்டால் சிக்கல்களை ஓரளவு தவிர்க்கலாம்.

4 ராசிகளுக்கும் பரிகாரம்

மேஷம்: புதன்கிழமை விநாயகரை வழிபட்டு, அருகம்புல் மாலை சாத்தலாம். பச்சை பயறு தானம் செய்வதும் நல்லது.

கன்னி: புதன்கிழமை பெருமாள் அல்லது விஷ்ணுவை வழிபட்டு, பச்சை நிறப் பொருட்களை தானமாக வழங்கலாம். புதன் மந்திரத்தை உச்சரிப்பதும் நன்மை தரும்.

சிம்மம்: தினமும் விநாயகரை வழிபட்டு, அருகம்புல் சாத்தலாம். கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியாக இருப்பது சிறந்த பரிகாரம்.

விருச்சிகம்: புதன்கிழமை விநாயகர் வழிபாடு செய்து, பச்சை பயறு அல்லது பச்சை காய்கறிகளை தானமாக வழங்கலாம். குடும்பத்தில் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது.

இவை ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான பரிகாரங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories