மீன ராசி பிப்ரவரி 2026: செலவுகள் கூடினாலும் சாதனைகள் தேடி வரும் மாதம்!

Published : Feb 06, 2026, 03:02 PM IST

Meenam Rasi February Month Rasi Palan 2026 : மீன ராசிக்கு பிப்ரவரி மாத ராசி பலன்களை பார்க்கையில் நன்மைகளும் சவால்களும் நிறைந்த கலவையான பலன்களை கிடைக்கப் போகின்றன. வேலை, தொழில், குடும்பம், காதல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

PREV
16
பிப்ரவரி மாத ராசி பலன் 2026 மீன ராசி

ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் பிறந்த நிலையில் ஒவ்வொரு ராசியினருக்கும் பிப்ரவரி மாத ராசி பலன்களை பார்த்து வருகிறோம் ஏற்கனவே மேஷம் முதல் கும்பம் வரையிலான 11 ராசிகளுக்கும் பிப்ரவரி மாதத்தின் ராசி பலன்களை பார்த்த நிலையில் இந்த பதிவில் மீன ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் பற்றி பார்க்கலாம்.

26
மீன ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்

இந்த மாதத்தின் கிரகநிலைகள் பற்றி பார்க்கையில் சனி பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் ஜென்ம சனியாக வீற்றியிருக்கிறார். ராகு பகவான் 12 ஆம் வீட்டிலும், சனி பகவான் ஆறாம் வீட்டிலும், குரு பகவான் நான்காம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில் புதன், சுக்கிரன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் உங்களுக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்து வலிமை சேர்க்கின்றன. இந்த மாதத்தின் பின்பாதியில் இந்த நான்கு கிரகங்களும் 12ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாவதால், வீண் அலைச்சலும், விரைய செலவுகளும் ஏற்படக்கூடும்.

36
உத்தியோகம் மற்றும் தொழில்:

அலுவலகத்தில் வேலை பார்க்கும் மீன ராசியினருக்கு இந்த மாதம் பொற்காலமான மாதமாக இருக்கும். கடின உழைப்பிற்கான முழு அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். அதோட மட்டுமின்றி சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரையில் லாபம் இரு மடங்காக கிடைக்கும். நீண்ட காலத்துக்கு தேவையான திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்ப செயல்படுவீர்கள். இது உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான சூழலை உருவாக்கும்.

46
குடும்பம் மற்றும் உறவுகள்:

குடும்பத்தைப் பொறுத்தவரையில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீடு களை கட்டும். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவும், அன்பும் உங்களுக்கு கிடைக்கும். காதல் ஜோடிகளுக்கு இந்த மாதம் ஏற்ற, இறக்கம் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும். அதாவது இன்பமும், துன்பமும் கலந்த கலவையாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அன்னியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி அன்பு பாராட்டுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான சாதகமான வாய்ப்புகள் தேடி வரும்.

56
கல்வி மற்றும் நிதி நிலை:

மாணவர்களை பொறுத்தவரையில் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்தால் வெற்றி பெறலாம். வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். மீன ராசியை பொருத்தவரையில் பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். எந்நேரமும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் மாதத்தின் பின்பாதியில் தேவையற்ற மருத்துவ செலவுகளும், வீண் விரைய செலவுகளும் ஏற்படக்கூடும். ஆகையால் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது

66
மீன ராசிக்கான உடல் ஆரோக்கியம்:

மாதத்தின் முன்பாதியில் கிரகங்களின் சாதகமான பலன்கள் காரணமாக உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் மாதத்தின் பின்பகுதியில் கிரகங்களின் சாதமற்ற தன்மை காரணமாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சோர்வு, சிறு சிறு உபாதைகள் ஏற்படக்கூடும். உரிய நேரத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும், உணவு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

Pariharam:

சனிக்கிழமை தோறும் அனுமன் சாலிசா பாராயணம் செய்வது மன வலிமையை மேம்படுத்தும்.

சிவன் கோயிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய எல்லா நன்மையும் உண்டாகும்.

ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது ஜென்ம சனியின் பாதிப்பைக் குறைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories