உங்கள் ராசிநாதன் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கிறார். சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு மற்றும் கேதுவின் நிலை காரணமாக இன்றைய தினம் முடிவுகளை எடுப்பதில் சில குழப்பங்கள் ஏற்படலாம்.
பொதுவான பலன்கள்:
கேதுவின் நிலை காரணமாக முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் இறுதியில் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடிவுக்கு வரும். தயக்கங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
நிதி நிலைமை:
லாப ஸ்தானத்தில் சந்திர பகவானின் சஞ்சாரம் காரணமாக எதிர்பாராத பணவரவு ஏற்படலாம். பங்குச்சந்தை அல்லது புதிய முதலீடுகளில் நிதானத்துடன் இருக்க வேண்டும். சுப விரயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் நிதானம் தேவை. விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காதலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். பரஸ்பர புதல் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
மீன ராசிக்காரர்கள் இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை என்பதால் மஞ்சள் நிற மலர்கள் கொண்டு வழிபடலாம். முதியவர்கள் அல்லது ஏழை மாணவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)