Mars Rise in Aquarius 2026 Lucky Zodiac Signs : கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பகவான் விரைவில் கும்ப ராசியில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அஸ்தமனம் ஆகி மீண்டும் உதயமாகிறார். செவ்வாய் அஸ்தமன நிலையில் இருக்கும் போது அதன் நற்பலன்கள் தாமதமாகவே கிடைக்கும். அந்த வகையில் 2025 நவம்பர் மாதத்தில் அஸ்தமன நிலையை அடைந்த அவர், 26 மார்ச் 2026 கும்ப ராசியில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு நேர்மறையான பலன்கள் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
மேஷம்
கும்ப ராசியில் செவ்வாய் பகவான் உதயமாவது மேஷ ராசியின் 11-வது வீட்டில் நிகழ இருக்கிறது. 11-வது வீடு லாப ஸ்தானம் என்பதால் மேஷ ராசிக்காரர்கள் மார்ச் 26 தொடங்கிய நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரை வாழ்வில் இருந்து வந்த தடைகள் அகலும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். பணி புரிபவர்கள் இலக்குகளை அடைவீர்கள். இதன் காரணமாக தலைமைப் பதவிகள் அல்லது புதிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும்.
36
மிதுனம்
மிதுன ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் குவியும். தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றிகளைக் குவிப்பீர்கள். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
மகர ராசியில் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் உதயமாக இருக்கிறார். எனவே மகர ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைகள் நல்லபடியாக முடியும். தொழில் தொடங்க இருந்த தடைகள் விலகும். புதிய தொழிலைத் தொடங்கி வெற்றிகளைப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். எந்த துறையை எடுத்தாலும், அதில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
56
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள், எதிரிகள் விலகுவார்கள். இதனால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வருமானத்தில் திடீர் உயர்வு இருக்கும். நிலம், தங்கம், வெள்ளி போன்ற திட்டங்களில் முதலீடுகளைத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நனவாகும்.
66
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் உதயம் பல வழிகளில் நன்மை தரும். தொழில் மற்றும் வேலை சிறப்பாக நடைபெறும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகும். குடும்ப தகராறுகள் தீர்க்கப்படும். பிரிந்து சென்ற தம்பதிகள் மீண்டும் இணைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கைக்கான வழிகள் கிடைக்கும். வியாபாரிகள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை அல்லது பிற முதலீடுகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)