Jan 29 Makara Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று பண விஷயத்தில் செம்ம அடி விழப்போகுது.! ஜாக்கிரதை.!

Published : Jan 28, 2026, 03:21 PM IST

Jan 29 Makara Rasi Palan : ஜனவரி 29, 2026 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, நாள் முழுவதும் மனதில் ஒருவித பதற்றம் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும். இழுபறியில் இருந்த வேலைகள் இன்று முடிவடையும். தாய் வழி உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும். பதற்றம் காரணமாக தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சிறு தொகைகள் செலவிட நேரிடலாம். சிலருக்கு கூடுதல் சுமைகள் காரணமாக பணம் அதிக அளவில் செலவு செய்ய நேரிடும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் நிதானம் காப்பது அவசியம். பேசும்பொழுது கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டாம். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள பழக வேண்டும். பிள்ளைகளின் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமை என்பதால் தட்சிணாமூர்த்தியை வணங்குவது நன்மைகளைத் தரும். ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பேனா போன்ற கல்விக்கு தேவையான உபகரணங்களை தானமாக வழங்குவது தடைகளை நீக்கி சுப பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories