Lucky Birth Dates For Money: குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்குமாம். சரியான முடிவுகளை எடுத்து இவர்கள் நிறைய சம்பாதிப்பார்கள். அந்த லக்கி தேதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
எண் கணிதத்தின்படி, பிறந்த தேதி ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மற்றும் கெட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண விஷயத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணத்தை சம்பாதிப்பதில் இவர்கள் ரொம்பவே புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். வாழ்க்கையில் சீக்கிரமே செட்டில் ஆகும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். அப்படி பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படும் தேதிகள் எவை என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
25
மூல எண் 1
எந்த மாதமாக இருந்தாலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மூல எண் 1-ஐ கொண்டவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமை பண்பு கொண்டிருப்பார்கள் என்று எண் கணிதம் சொல்கிறது. இவர்கள் சுயமாக முடிவுகளை எடுக்கவே விரும்புவார்கள். புதிய விஷயங்களை முயற்சிக்க தயங்க மாட்டார்கள். வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். பண விஷயத்திலும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக கடுமையாக உழைப்பார்கள். அதனால் இவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
35
மூల எண் 2
எந்த மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 2 ஆகும். இவர்கள் உணர்ச்சிகரமானவர்களாக இருந்தாலும், நல்ல சிந்தனை திறன் கொண்டவர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். குறிப்பாக பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும், எங்கே சேமிக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். மற்றவர்களுடன் இணைந்து வேலை பார்ப்பதும், பார்ட்னர்ஷிப் தொழில்களும் இவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.
எந்த மாதமாக இருந்தாலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே கிரியேட்டிவான ஆட்கள். வழக்கமான பாதையில் செல்லாமல், புதிதாக யோசித்து வாய்ப்புகளை தேடும் குணம் இவர்களிடம் இருக்கும். மீடியா, கலைத்துறை, தகவல் தொடர்பு, கல்வி மற்றும் வியாபாரம் போன்ற துறைகளில் இவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். தங்களது திறமையை சரியாக பயன்படுத்தினால், இவர்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறுவார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது.
55
மூல எண் 5
எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 5 ஆகும். மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டு செயல்படும் குணம் இவர்களுக்கு இருக்கும் என்று நியூமராலஜி சொல்கிறது. புதிய வாய்ப்புகள் வரும்போது, அதை சரியாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்வார்கள். வியாபாரம், மார்க்கெட்டிங், தகவல் தொடர்பு மற்றும் பயணம் தொடர்பான துறைகளில் இவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். ஒரே ஒரு வருமானத்தை மட்டும் நம்பி இருக்காமல், பல வழிகளில் பணம் சம்பாதிப்பது இவர்களின் ஸ்பெஷாலிட்டி. இதுவே இவர்களை நிறைய சம்பாதிக்க வைக்கிறது.