Lucky Zodiac: ஜோதிட சாஸ்திரத்தின்படி பணத்தை வசீகரிக்கும் ஆற்றல் கொண்ட 4 முக்கிய ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். ரிஷபம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களின் தனித்துவமான குணாதிசயங்களால் செல்வந்தர்களாக மாறுகிறார்கள்.
சந்தோஷ் சர்மா ஒரு பிரபலமான ஜோதிடர் மற்றும் ஆன்மீக ஆலோசகர் ஆவார். குறிப்பாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இவரது கணிப்புகள் பலரால் கவனிக்கப்படுபவை. குறிப்பாக இவர் பெரும்பாலும் அரசியல் மாற்றங்கள், தேர்தல் முடிவுகள் மற்றும் முக்கிய தலைவர்களின் ஜாதகங்கள் குறித்த கணிப்புகளை வழங்குவதில் பெயர் பெற்றவர். இந்நிலையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் மட்டுமல்லாது, அவர்களின் ராசிக்குரிய குணாதிசயங்களும் அவர்களைப் பெரும் செல்வந்தர்களாக மாற்றுகின்றன. அந்த வகையில், பணத்தை வசீகரிக்கும் ஆற்றல் கொண்ட 4 முக்கிய ராசிகள் என்னென்ன என்பது குறித்து ஜோதிட நிபுணர் சந்தோஷ் ஷர்மா கூறியுள்ளார்.
25
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், சொகுசு வாழ்க்கையின் மீது தீராத ஆசை கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த வாழ்க்கையைப் பெற குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். பணத்தை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இவர்களுக்குப் பிறவியிலேயே ஒரு ஞானம் உண்டு. ஆடம்பரத்திற்காக ஆசைப்பட்டாலும், சேமிப்பு என்று வந்துவிட்டால் இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது. இந்த 'பட்ஜெட்' போடும் குணமே இவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
35
கன்னி ராசி
புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட கன்னி ராசிக்காரர்கள், ஒரு கணக்காளரைப் போலச் செயல்படுவார்கள். சிறிய ஓட்டையும் பெரிய கப்பலை மூழ்கடிக்கும்' என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். எனவே, தேவையற்ற நஷ்டங்களைத் தவிர்ப்பதில் வல்லவர்கள். ஒவ்வொரு செயலையும் முழுமையாக ஆராய்ந்து செய்வதால், இவர்களது தொழிலில் தோல்விகள் மிகக் குறைவு. இவர்களது அயராத உழைப்பு இவர்களுக்குச் சீரான வருமானத்தையும், பெரும் வெற்றியையும் தேடித்தருகிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு மர்மமான வெற்றியாளர்கள். இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியாது. பங்குச்சந்தை அல்லது பெரிய வியாபாரங்களில் எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பதை இவர்களின் உள்ளுணர்வு சரியாகக் காட்டும். தங்களின் லாபத்தைப் பற்றி வெளியில் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். அமைதியாகத் திட்டமிட்டு, பெரிய அளவில் சொத்துக்களைக் குவித்து உலகத்தையே வியக்க வைப்பார்கள்.
55
மகர ராசி
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்கள் 'நிதானமான வெற்றி'க்குச் சொந்தக்காரர்கள். இன்று விதைப்பதை நாளை அறுவடை செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்; பல ஆண்டுகள் கழித்துப் பெரிய விருட்சமாக வளர வேண்டும் என்று காத்திருப்பார்கள். தோல்விகளைக் கண்டு அஞ்சாத இவர்களின் வைராக்கியம், ஒரு கட்டத்தில் இவர்களைச் சமுதாயத்தின் உச்சத்தில் அமர வைக்கும். இவர்களின் பொறுமையே இவர்களின் மிகப்பெரிய மூலதனம்.