Khappar Yoga 2026 : மே மாதம் சில கிரகங்களின் சேர்க்கை காரணமாக கப்பார் யோகம் உருவாக இருக்கிறது. இது சில ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் பிரச்சனையை ஏற்படுத்த இருக்கிறது.
வேத ஜோதிடத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் நகர்ந்து பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் முக்கிய கிரகங்களான சூரியன், ராகு, சனி ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து கப்பார் யோகத்தை உருவாக்க இருக்கின்றன. இந்த யோகம் ஜோதிடத்தில் எதிர்மறை ஆற்றலை வழங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு மே 1 முதல் ஜூன் 29 வரை கப்பார் யோகம் நிகழ இருக்கிறது. இந்த யோகத்தின் தாக்கம் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது.
26
கப்பார் யோகம் எப்படி உருவாகிறது?
‘கப்பார் யோகம்’ உருவாவதற்கு சில கால கணக்கீடுகளும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் செவ்வாய் கிழமை, சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகள் ஐந்து முறை வரும்பொழுது அல்லது அமாவாசை திதியானது சங்கராந்தி நாளில் இணையும் பொழுதோ இந்த யோகம் ஏற்படலாம். ஜூன் 15, 2026 சோமாவதி அமாவாசை மிதுன சங்கராந்தி உடன் இணைந்து வருவது இந்த யோகத்தை மேலும் தீவிரப்படுத்தும். இந்த யோகத்தால் துரதிஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
36
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்மறையான பலன்களை அளிக்க உள்ளது. மிதுன ராசிக்காரர்கள் மே மாதத்தில் கப்பார் யோகத்தால் பொருளாதார ரீதியான பாதிப்புகளை சந்திக்க கூடும். உங்கள் சேமிப்பை பாதுகாப்பதில் நீங்கள் சிரமப்படக்கூடும். செலவுகள் கணிசமாக உயர்வதால் நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் குறையும். வருமானத்திற்கான வழிகள் மூடப்படலாம் நிதி ஆதாயங்கள் குறையக்கூடும் குடும்ப உறுப்பினர்களுடன் தகராறுகள் ஏற்படலாம்.
வீட்டில் அமைதியின்மை நிலவலாம். வணிகத்தில் எதிர்பாராத தடைகள் வரக்கூடும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கடினமான காலகட்டத்தை சந்திக்க நேரிடும். செலவுகளை கவனமாக கையாள வேண்டும். நிதியை கையாளுவதில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது தடைகளை நீக்க உதவும்.
கன்னி ராசிக்காரர்கள் கப்பார் யோகத்தால் மோசமான பலன்களை அனுபவிக்கக்கூடும். குறிப்பாக அவர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கலாம். வாழ்க்கையில் எதிர்பாராத சவால்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாக கூடும். மருத்துவ செலவுகளுக்காக பெரும் தொகையை செலவு செய்ய நேரிடலாம். நிதி ரீதியாக பின்னடைவை சந்திப்பீர்கள்.
யோசிக்காமல் எடுக்கும் காரியங்கள் நெருக்கடியை தரக்கூடும். குடும்பத்தில் தகராறுகள் பிரச்சனைகள் ஏற்பட்டு மன நிம்மதி சீர்குலையலாம். வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படக்கூடும். உங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் கால பைரவரை வழிபடுவது ஏற்படும் தடைகளில் இருந்தும், கடன் பிரச்சனைகளில் இருந்தும் உங்களை விடுவிக்க உதவும்.
56
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கப்பார் யோகம் எதிர்மறையான பலன்களை வழங்கக்கூடும். பல சிக்கல்கள் ஏற்படலாம். இழப்புகளை சந்திக்க நேரிடும். வேலையில் அதிக அழுத்தம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். பணிச்சுமை உங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடும். இதன் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். நிதி நிலையை பொறுத்த வரை இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஈகோ பிரச்சனை தலைதூக்கும்.
இதன் காரணமாக விரிசல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகள் அதிக தொல்லைகளை கொடுப்பார்கள். இதன் காரணமாக தொழிலில் மந்த நிலை ஏற்படலாம். இழப்புகளை சந்தித்த நேரிடலாம். சக ஊழியர்களுடன் மோதல் ஏற்படலாம். வரவு செலவு திட்டத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டியது அவசியம். உறவுகளை பொறுமையாக கையாளுங்கள். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
66
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.