5 மாசத்துக்கு கொண்டாட்டம் தான்; யாரெல்லாம் காசு, பணத்தோடு ஜாலியா, ஹேப்பியா இருப்பீங்க? லக்கிமேன் யாரு?

Published : Nov 17, 2024, 08:33 AM IST

Jupiter Transit In Rohini Nakshatra 2024 Palan Tamil : குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ள நிலையில் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறதா? நல்லது நடக்குமா என்பதை அறிந்து கொள்வோம்.

PREV
14
5 மாசத்துக்கு கொண்டாட்டம் தான்; யாரெல்லாம் காசு, பணத்தோடு ஜாலியா, ஹேப்பியா இருப்பீங்க? லக்கிமேன் யாரு?
Rohini Nakshatra Jupiter Transit, Jupiter Transit 2024

நவம்பர் 28 மதியம் 1:10 மணிக்கு குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். ஏப்ரல் 10, 2025 வரை அங்கேயே சஞ்சரிப்பார். நவக்கிரகங்களில் குரு மிக முக்கியமானவர். குருவின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு ஒரு ராசியில் சுமார் 1 வருடம் சஞ்சரிப்பார். அவ்வப்போது நட்சத்திரமும் மாறுவார். இது ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 28ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் குரு பிரவேசிக்கிறார். குரு சந்திரனின் நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். யாரெல்லாம் அதிர்ஷ்ட மழையின் நனையப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

24
Jupiter Transit In Rohini Nakshatra, Rohini Nakshatra Jupiter Transit

தனுசு ராசி:

ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசித்த பிறகு, குரு தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் இருப்பார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடன், எதிர்காலத்திற்காக சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பல ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இதனால் வருமானம் அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

34
Jupiter Transit Rohini Nakshatra, Jupiter Transit In Rohini Nakshatra 2024 Palan Tamil

சிம்மம் ராசி:

குரு ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசித்து சிம்ம ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் அஸ்தங்கமாகிறார். இதனால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள் இந்த காலகட்டத்தில் லாபம் அடைவார்கள். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகம் செய்பவர்களும் நல்ல லாபம் அடைவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

44
Jupiter will Transit Rohini Nakshatra, Jupiter Transit Rohini Nakshatra 2024 Palan Tamil

கடகம் ராசி:

கடக ராசியில் குரு ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், பாக்கிய ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் செல்வது நன்மை பயக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இதனுடன், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பணிகளை மீண்டும் தொடங்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் இலக்கை அடைய முடியும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories