
ஜோதிடத்தில் அதிர்ஷ்டத்தையும் தொழில் வளர்ச்சியையும் இணைக்கும் முக்கியமான யோகங்களில் ஒன்றாக தர்ம கர்மாதிபதி யோகம் கருதப்படுகிறது. இந்த யோகம் வந்தால் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை அடையலாம். 9-ம் வீட்டின் அதிபதியான தர்மாதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியான கர்மாதிபதியும் வலுவான தொடர்பு பெறும்போது இந்த யோகம் உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. முதல்வர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு இந்த யோகம் அவர்களது ஜாதகதத்தில் இருந்தபோதே அவர்கள் உச்சத்தை தொட்டார்கள் என கூறப்படுகிறது. கட்டம் சரியாக இருந்தாலும் உழைப்பும் அதனுடன் சேரவேண்டும் என்கின்றனர் சிலர்.
இந்த யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அதிர்ஷ்டம் மற்றும் தொழில் முயற்சிகள் ஒன்றாக கைகொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில், இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, பதவி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஜோதிடப் பார்வையில் கூறப்படுகிறது. தர்ம கர்மாதிபதி யோகத்தால் தற்போது அதாவது வரும் நாட்களில் யோத்தை அடைய போகும் ராசிகள் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
தர்ம கர்மாதிபதி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மாற்றம் அல்லது புதிய பொறுப்பு கிடைக்கலாம். வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கவும் தொழில் செய்வோருக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
புதிதாக தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வருமான வாய்ப்புகளை பெறலாம். இதுவரை மெதுவாக சென்ற சில முயற்சிகள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வேகமெடுக்கலாம். பணவரவு அதிகரித்தால் அதனை தேவையற்ற செலவுகளில் பயன்படுத்தாமல் சேமிப்பிலும் முதலீட்டிலும் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவும் போது சந்தோஷத்துடன் கூடிய மன நிம்மதி கிடைக்கும்.
தர்ம கர்மாதிபதி யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு திறமை மற்றும் பேச்சுத்திறன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. வேலை தேடுபவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தகவல் வரலாம். சிலருக்கு மாத சம்பளம் ஆயிரங்களில் இருந்து லட்சங்களில் உயரும் நேரம் இது.
தொழிலில் இருப்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கலாம். முதலீடுகளில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும் நேரம் இது. சிலருக்கு புதிய துறையில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பும் உருவாகலாம். வெளிநாடு அல்லது தொலைதூர இடங்களுடன் தொடர்புடைய வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
தர்ம கர்மாதிபதி யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட தடைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றத்துக்கான பாதை திறக்கலாம். குறிப்பாக தொழில் மற்றும் வருமானம் தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். அரசு உத்யோகம் கதவை தட்டும். மற்றவர்களுக்கு உதவும் நேரம் வரும். பழைய பாக்கிகள் வசூலாகும் நேரம். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணக்கமான உறவு இருக்கும். பழைய சண்டை சச்சரவுகள் காணாமல் போகும். தர்ம கர்மாதிபதி யோகத்தால் வரும் மாதங்களில் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைப்பது, புதிய ஒப்பந்தம் கிடைப்பது அல்லது தொழிலில் முக்கியமான முடிவு எடுப்பது போன்ற சூழல்கள் உருவாகலாம். குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கலாம். சொத்து தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான செய்திகள் வர வாய்ப்புள்ளதாக ஜோதிடப் பார்வையில் கூறப்படுகிறது.
தர்ம கர்மாதிபதி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் காலமாக இது அமையலாம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு அல்லது முக்கியமான வாய்ப்பு கிடைக்கலாம். பதவியும் பணமும் ஒரே நேரத்தில் வரும் என்பதால் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொழில் செய்பவர்களுக்கு விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால் அதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். புதிய தொடர்புகள் மூலம் எதிர்பாராத பலன்கள் கிடைக்கலாம். பணவரவு அதிகரிக்கும் சூழல் இருந்தாலும், கடன் மற்றும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம். அடுத்தவர்களுக்கு உதவி செய்து தர்ம பிரபுவாக மாறினால் உங்களுக்கு வரும் பணம் பல படங்கு அதிகரிக்கும்.
தர்ம கர்மாதிபதி யோகம் இருப்பதால் நேரடியாக தங்கத் தட்டில் சாப்பிடுவார்கள் அல்லது பென்ஸ் கார் வாங்குவார்கள் என்று அர்த்தமில்லை. இவை செல்வம், வசதி, அந்தஸ்து மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டும் மிகைப்படுத்தப்பட்ட சொல்லாட்சிகள். மேலும், ஒரு ராசியை மட்டும் வைத்து தனிப்பட்ட ஜாதகப் பலனை உறுதியாக கூற முடியாது. லக்னம், கிரக நிலைகள், தசா-புக்தி உள்ளிட்ட பல அம்சங்கள் தனிப்பட்ட ஜாதகப் பலனில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இந்த 4 ராசிக்காரர்களுக்கும் வாய்ப்புகள் சாதகமாக அமையலாம் என்ற நம்பிக்கையுடன், கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி உழைப்பையும் திட்டமிடலையும் தொடர்வது முக்கியம்.